காவிக் கட்சி ‘சித்து’ விளையாட்டாம்.. அரசியல் ஆதாய ‘சூதாட்டம்’.. பொங்கி எழுந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மருது!
ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : 2024-நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒப்பந்தம் போட்டு, அண்ணாமலை உறவினர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி நீதிமன்றம் வழியாக அரசியல் காய்நகர்த்தலைச் செய்திருக்கிறது பாஜக என மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்த நிலையில், இந்த தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் பாஜகவை விமர்சனம் செய்துள்ளார்.
வருமான வரித்துறை, அமலாக்க பிரிவு, சிபிஐ என்னும் வரிசையில் பாஜகவின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு நீதித் துறையும் பயன்படுத்தப்படுகிறது என்றும் கடுமையாகச் சாடியுள்ளார் மருது அழகுராஜ்.

ஈபிஎஸ் பக்கம் பாஜக
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நிகழ்ந்து வந்த ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலில், பாஜக தலைமை இருவரில் யாருக்குமே திட்டவட்ட ஆதரவைத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு இரட்டை இலை சின்னம், ஈபிஎஸ் அணி அறிவித்த வேட்பாளர் தென்னரசுவுக்கு கிடைக்க வழிவகுத்தது. தொடர்ந்து பாஜகவும் தங்கள் ஆதரவை தெரிவித்தது. தொடர்ந்து, நேற்று வந்த அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால், பாஜக முழுமையாக ஈபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டதோ என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

காவிக் கட்சி
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "மராட்டிய மாநிலத்தின் சிவசேனா அரசியலை, பாஜகவுக்கு பல்லக்கு தூக்கும் ஷிண்டேவை நோக்கி நகர்த்தியது போலவே, தமிழ்நாட்டிலும் அதிமுக அரசியலை அதே பாஜகவுடன் 2024-நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் அண்ணாமலை உறவினர் எடப்பாடியை நோக்கி அதே நீதிமன்றம் வழியாக நகர்த்தி இருக்கிறது காவிக் கட்சி. இது என் போன்றோர் எதிர்பார்த்த ஒன்று தான்.

2017 போலவே
2017-ல் எப்படி சசிகலாவுக்கு எதிராக நீதிமன்றம் மூலமாக விரும்பிய தீர்ப்பை விரும்பிய வேகத்தில் வரவழைத்து அடிமை எடப்பாடி ஆட்சிக்கு அடித்தளம் அமைத்து தரப்பட்டதோ, அது போலவே இப்போதும் அதே பாஜகவின் அரசியல் ஆதாயச் சூதாட்டம் மீண்டும் அரங்கேறி இருக்கிறது. ஈரோட்டு கிழக்கு இடைத்தேர்தல் வாக்களிப்புக்கு சிலமணி நேரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் பல வாரங்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தீர்ப்பு இடைத்தேர்தல் வாக்களிப்பில் மக்களிடம் சலனத்தை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் உச்சநீதிமன்றம் அதனை கருத்தின் கொள்ளாது செயல்பட்டிருக்கிறது.

சித்து விளையாட்டு
அது சரி.. இது போன்ற வாய்ப்புகள் எதிர்க்கட்சிகள் எதற்கும் கிட்டாத சந்தர்ப்பம் என்பதை சாமானிய மக்களாலும் புரிந்து கொள்ள முடியும். ஆக.. வருமான வரித்துறை, அமலாக்க பிரிவு, சிபிஐ என்னும் வரிசையில் பாஜகவின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு நீதித் துறையும் பயன்படுத்தப்படுகிறது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. பதினோரு எம்.எல்.ஏக்களை மட்டுமே தன் வசம் வைத்திருந்த அன்றைய பாஜக ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலை சின்னத்துக்கான உரிமை தொடங்கி பல சாதகங்கள் அன்று கிடைத்தன.
ஆடு - ஆட்டுக்குட்டி
அப்படியென்றால் இப்போது அந்த அரவணைப்பு எடப்பாடியை நோக்கி நகர்ந்து விட்ட நிலையில் எடப்பாடி கைகளில் வேண்டியதை தருகிற அலாவுதீனின் அற்புத விளக்கு இருப்பதற்கு சமம் தானே. ஆனாலும் ஆட்டுக்கு தீனி போட்டு வளர்க்கும் பாசம் எல்லாம் தேர்தல் திருவிழா வரைக்கும் தான் என்பது ஆட்டுக்கும் அதனை ஏற்பாடு செய்திருக்கும் ஆட்டுக் குட்டிக்கும் பொருந்தும் தானே" என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications