நேரம் வரும்! காத்திருக்கும் ஓபிஎஸ்! இனி எல்லாம் சுபமே! முனுசாமி ஊரிலிருந்து கிடைத்த புது தெம்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் விரைவில் சசிகலாவை இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரபடுத்தப்பட்டு வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவகாரம் ஏற்பட்டுள்ளதால் அங்கு ஏற்கெனவே இருந்த இரட்டை தலைமைகள் பிரிந்து கிடக்கிறார்கள். இருவரும் அதிமுகவிலிருந்து நிர்வாகிகளை நீக்குவதும் நியமிப்பதும், பதவி கொடுப்பதும் என அறிக்கைகளை விட்டு வருகிறார்கள். அது போல் நீதிமன்ற கதவுகளையும் தட்டி வருகிறார்கள். சீசா விளையாட்டு போல் ஒருமுறை ஓபிஎஸ்ஸும் மறுமுறை எடப்பாடி பழனிசாமியும் நீதிமன்ற தீர்ப்பில் வென்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இன்றைய தினம் கிருஷ்ணகிரியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 அண்ணாதுரை பிறந்தநாள்

அண்ணாதுரை பிறந்தநாள்


இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்தநாளை கிராமங்கள்தோறும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார்.

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு


அதை ஏற்றுக் கொண்டு நாங்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். எங்களை போல் பிரிந்து கிடக்கும் எங்கள் பகுதி நிர்வாகிகளிடமும் ஒற்றுமை குறித்து பேசி வருகிறோம். தற்போதைக்கு இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என்றாலும் எதிர்காலத்தில் இரு அணிகளும் இணைய வாய்ப்புகள் உள்ளன.

சசிகலா இணைவார்

சசிகலா இணைவார்

அது போல் அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அவரை கட்சியில் இணைப்பதற்கான நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அதற்கான வாய்ப்புகள் வரும். நிச்சயம் அதிமுகவில் சசிகலா இணைவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என தெரிவித்தார்.

ஓபிஎஸ் காய் நகர்த்தல்

ஓபிஎஸ் காய் நகர்த்தல்

அதிமுகவில் பெரும்பாலான உரிமைகள் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்ட நிலையிலும் அதிமுகவிற்கு கூட்டுத் தலைமை வகிக்கும் நாள் விரைவில் வரும் என ஓபிஎஸ் தரப்பு தங்களால் முயன்ற அளவுக்கு காய்களை நகர்த்தி வருகிறது. கடைசி அஸ்திரமாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பதை கையில் எடுக்க ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+