"முத்திடுச்சே".. வேலைக்காரியா? அதைவிடுங்க.. தினகரன் வீட்டில் வேலை பார்த்தவர் காமராஜ்: வைத்திலிங்கம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் இரு தரப்பினரிடையே, டெல்டா ஓட்டுக்களை அள்ள போவது யார்? என்ற போட்டா போட்டி வெளிப்படையாக தொடங்கி உள்ளது.. இது மிகுந்த பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார். அந்த பேட்டியில் பெரும்பாலும், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தை சரமாரி விமர்சித்துள்ளார்.

"வைத்திலிங்கம் என்கிற முண்டு கல்லை கட்டிக்கொண்டு ஓபிஎஸ் கடலில் இறங்கி விட்டார். அவரது பேச்சை கேட்டு ஓபிஎஸ் தற்போது அரசியல் அனாதையாகி விட்டார். நான் சந்தித்த மனிதர்களில் அறிவே இல்லாத முண்டம் என்றால் அது வைத்திலிங்கம் தான். நான் வேறு வழியில்லாமல் சொல்லுகிறேன்.
வைத்திலிங்கம்: நான் எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்க தெம்பு உள்ளவன். வைத்திலிங்கத்திடம் அதிமுகவை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதால் அந்த வெறியில் வைத்திலிங்கம் எங்களை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். வைத்திலிங்கம் தொகுதி முழுவதும் இபிஎஸ் கையில் வந்து விட்டது. வீட்டு வேலைக்காரியெல்லாம் மகாராணியாகிவிட முடியாது என்று சசிகலாவை விமர்சித்தவர் முதலில் வைத்திலிங்கம் தான்" என்று காமராஜ் காட்டமாக கூறியிருந்தார்.
இதையடுத்து, வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டியை தந்துள்ளார்.. அதில், "காமராஜ் திமுகவில் இருந்து வந்தவர்.. அவர் ஒரிஜினல் அதிமுக கிடையாது.. அவர் வரலாறு சொல்றேன்.. தினகரன் வீட்டில் வேலை பார்த்தவர் காமராஜ்.. அவருக்கு என்னை பத்தி சொல்றதுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது.. ஒரே மேடையில், அதிமுகவை பற்றியோ, அல்லது அவரை பற்றியோ, அல்லது என் குடும்பத்தை பற்றியோ, அல்லது அரசியலை பற்றியோ, விவாதிக்க நான் தயார்.. அவர் எந்த தேதி என்று மட்டும் சொன்னால் போதும், நான் சந்திக்க தயார்.. கேட்டு சொல்லுங்க..
ஒரத்தநாடு: முதல்ல என்னை எதிர்த்து போட்டியிட சொல்லுங்க.. அவர் ஒரத்தநாட்டில் போட்டியிட்டா டெபாசிட் போயிடும்.. எந்த ஜென்மத்திலும் அங்கே அவரால் டெபாசிட் வாங்க முடியாது.. அவர் சொந்த தொகுதியான மன்னார்குடியில் வேண்டுமானால் நின்று டெபாசிட்டை வாங்க சொல்லுங்க.. பார்க்கலாம்.. அப்போ ஒப்புக்கொள்கிறேன்" என்றார். அதிமுக மாஜி அமைச்சர் காமராஜ் + மூத்த தலைவரும், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளருமான வைத்திலிங்கம் என இவர்களின் காரசார விவாதங்கள்தான் இணையத்தை கடந்த 2 நாட்களாகவே ஆக்கிரமித்து உள்ளன..
கடந்த சில மாதங்களாகவே, டெல்டா பகுதியை டார்கெட் செய்து வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. எனினும், ஓபிஎஸ்ஸூக்கு பெரும் ஆதரவாகவும், பலமாகவும் இருந்து வருவது மூத்த தலைவர் வைத்திலிங்கம்தான்.. அதனால்தான் வைத்திலிங்கத்தை இழுக்க எடப்பாடி தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.. ஆனால், வைத்திலிங்கத்தின் விசுவாசத்தை கண்டு, எடப்பாடி தரப்பே மிரண்டு போய்விட்டதாம்..
எடப்பாடி டார்கெட்: டெல்டாவை பொறுத்தவரை மூத்த தலைவர் வைத்திலிங்கத்தை தாண்டி, அதிமுகவில் வேறு யாரும் அந்த அளவுக்கு பெரிதாக வளரவில்லை.. வைத்திலிங்கத்தின் கோட்டையாகவே டெல்டா விளங்குவதால்தான், எடப்பாடிக்கு டெல்டா இப்போதுகூட கலக்கத்தையே தந்து வருகிறது.. அதனால்தான், வைத்திலிங்கத்தின் செல்வாக்கை வீழ்த்தி, அந்த இடத்துக்கு மாஜி அமைச்சர் காமராஜ்ஜை கொண்டுவர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம்..
இதற்காகவே, கடந்த மாதம் வைத்திலிங்கத்தின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து, காமராஜ் மகன் திருமண விழாவிலும் கலந்து கொண்டு"எவனாலும் அதிமுகவை தொட முடியாது" என்று வைத்திலிங்கம் தரப்பை பார்த்து சீறியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.. இதற்குபிறகுதான், ஒரத்தநாட்டில் டிடிவியின் வலதுகரமாக இருந்த அமமுக மாவட்டச் செயலாளர் சேகரையும் அதிமுகவுக்குள் வளைத்து கொண்டு வந்திருந்தார் காமராஜ்.
டெல்டா குறி: இப்படி டெல்டாவுக்கு ஏற்கனவே குறி வைத்து காய்நகர்த்தி வரும்சூழலில், மீண்டும் டெல்டாவையே குறி வைத்துதான், நேற்று முன்தினம் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது..
வைத்திலிங்கத்தின் இடத்தை காமராஜ் நிரப்ப வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் நோக்கமாக உள்ளது.. ஆனால், அதற்குள் டிடிவி தினகரனின் ஆதரவும் ஓபிஎஸ் டீமுக்கு கிடைத்துவிட்டதால், இப்போது மேலும் கலக்கம் எடப்பாடி தரப்புக்கு சூழ்ந்துள்ளதாக தெரிகிறது.. அதன் வெளிப்பாடாகவே, இரு தரப்பிலும் வார்த்தை மோதல்கள் வெடித்து கிளம்பியுள்ளன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். டெல்டாவின் வாக்
குகளை யார்தான் அள்ள போகிறார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்..!


Click it and Unblock the Notifications
