Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ்+டிடிவி+சசிகலா.. எடப்பாடிக்கு தென்மாவட்டத்தில் டெபாசிட்டே தேறாது.. கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ்+டிடிவி+ சசிகலா இணைப்பு குறித்து பேசிய ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தென்மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட்டே கிடைக்காது என்று கூறினார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஒன் இந்தியா தமிழின் பிரத்யேக நேர்காணலில் பங்கேற்றார். அப்போது ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் திட்டம் என்ன, அவர் அடுத்து என்ன செய்ய போகிறார், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எதற்கு, டிடிவி தினகரன், பாஜக, சசிகலா உள்பட பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி பேட்டி அளித்தார்.

OPS+TTV+ Sasikala merger; Edappadi Palaniswamis party will not get deposit: Kolathur Krishnamurthy

அப்போது அவர் கூறுகையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எதற்காக நடத்துகிறோம் என்றால், அடுத்த மாநாடு எங்கு நடத்த வேண்டும் என்பதை பற்றித்தான் விவாதிக்க போகிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதமாக இருந்தது குறித்து கேட்கிறீர்கள், இது ஒருபுறம் இருக்கட்டும். இரட்டை இல்லை அல்ல, 10 இலை கூட வைத்துக்கொள்ளட்டும். ஆனால் இரட்டை இலை என்பது அது ஓ பன்னீர்செல்வம் கையில் இருந்தால் தான் வெற்றி பெறும்.

எடப்பாடி பழனிசாமி கையில் இரட்டை இருந்தாலும், கட்சியே அவர் கையில் (தற்காலிகமாக) இருந்தாலும், எந்த ஜென்மத்திலும் அவர்களால் ஜெயிக்க முடியாது. தோற்றுத்தான் போவார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு இனி இறங்குமுகமே தவிர, ஏறுமுகமே கிடையாது. எடப்பாடி பழனிசாமிக்கு 8 தோல்வி கிடைத்துள்ளது. கர்நாடகாவில் வேட்பாளரை வாபஸ் வாங்கியதிலும் தோற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை என்ன நினைக்கிறார் என்றால், அதிமுகவில் இருந்தால் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து கட்சியை சேர்த்து அபகரிக்க பார்க்கிறார்.

எங்களை அதிமுக கரவேஷ்டி கட்டக்கூடாது என்கிறார்கள், கொடியை பயன்படுத்தக்கூடாது, இரட்டை இல்லையை பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். இப்படி சொல்ல அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது. எங்களை நீக்க இவர்கள் யார். எங்களை அம்மா பார்த்து நீக்க வேண்டும்.நாங்கள் தான் அவர்களை நீக்கி உள்ளோம். யார் இரட்டை இலையை பயன்படுத்த வேண்டும் என்பதை இறுதி தீர்ப்பு முடிவு பண்ணட்டும். அதிமுக என்ற கட்சி ஓபிஎஸ் தலைமை ஏற்றால் தான் நாடாளுமன்ற தேர்தலில் வலுபெறும், 2026ல் ஓபிஎஸ் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பார். எடப்பாடி பழனிசாமி எங்களை எட்டப்பன் என்கிறார். எட்டப்பன் என்பது அவர் தான். கேபி முனுசாமியை சொல்லலாம். தலைவருக்கே தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி தான்.

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்பவர்கள், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்கும் போதே கேட்டிருக்க வேண்டும். உண்மையான ஆண் மகனாக இருந்தால் அன்றைக்கு கேட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் ஏற்றிருப்போம். ஆனால் நடந்தது என்ன? ஜெயக்குமார் ராஜ்யசபா எம்பி சீட்டு கேட்டார், ஆனால் அவருக்கு கொடுக்காமல் தர்மருக்கு கொடுத்தோம். அதை மட்டும் ஜெயக்குமாருக்கு கொடுத்திருந்தால் இரட்டை தலைமையே போதும் என்று கூறியிருப்பார். இல்லை என்று சொல்ல முடியுமா இதனை..

ஓபிஎஸ் இடையூராக இருப்பார் என்று நினைத்து கூடுதலாக ஒரு தீர்மானம் போட்டு அவரை நீக்கிவிட்டு, கட்சியை கைப்பற்ற முடிவு செய்தது தெரிந்ததால் தான் நாங்கள் கோர்ட்டுக்கு போனோம்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி குறித்து கேட்கிறீர்கள்.. எங்களை ஒதுக்கிவிட்டு சந்தித்தால், தென் மாவட்டங்களில் 14 தொகுதிகளில் ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியாது, நீங்க டெபாசிட்டும் வாங்க முடியாது என்று கூறினார்.

அப்போது நெறியாளர் எந்த கட்சியில் நீங்கள் நிற்பீர்கள், எந்த சின்னத்தில் நிற்பீர்கள், நீங்கள் தான் கட்சியே ஆரம்பிக்கவில்லையே, சின்னமும் இல்லையே. டிடிவி தினகரன் எடப்பாடியை வீழ்த்த வேண்டும் என்று அமமுக ஆரம்பித்து நின்றார், அதில் பெரிய அளவில் வாக்குகளை பிரித்ததால் திமுகவிற்கு வெற்றி கிடைத்தது. அந்த காரியத்தை செய்யனும் என்றாலும் சின்னம் வேண்டும், கட்சி வேண்டும் அல்லவா.. அதற்கு முயற்சி எடுக்காமல் அதிமுகவிலேயே போட்டியிடுவேன் எனறு கூறுவதன் பின்னணி என நெறியாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்து பேசிய கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, எடப்பாடி தரப்பு இன்னமும் முழுமையாக தேர்தலை சந்திக்கவில்லை. தேர்தலை சந்தித்து தோற்ற பின் தான், ஓபிஎஸ் யார் என்பது உங்களுக்கு புத்தி வரும் என்றார். மேலும் ஒபிஎஸ், சசிகலா,டிடிவி தினகரன் எப்போது ஒன்றிணைவார்கள் என்பது குறித்தும் கிருஷ்ணமூர்த்தி பேசினார். முழு விஷயங்களை வீடியோவில் பாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+