அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று மோடி, அமித்ஷா விரும்புகின்றனர்.. ஒபிஎஸ் பேட்டி!
சென்னை: அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் விரும்புவதாக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஒருவர் தனது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக அதிமுக ஒன்றுபடுவதை தடுப்பதாக கூறிய ஒபிஎஸ், அதிமுக ஒன்றுபடுவதற்கான பேச்சு நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இன்று கொடுத்துள்ள பேட்டி தமிழக அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது. செங்கோட்டையன் பேசுகையில், என்னை அழைத்தது பாஜகதான். அங்கே என்ன நடந்தது என்பதை வெளியே சொல்ல விரும்பவில்லை. கட்சி ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். நானும் அதையேதான் சொன்னேன்.

பாஜகவை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களை விட்டால் பாஜகவுக்கும் வேறு வழியில்லை என்று கூறினேன். என்னை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என்று தெரிவித்தார். ஏப்ரல் 11ஆம் தேதி அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட போது, அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளில் பாஜக தலையிடாது என்று அமித்ஷா தெரிவித்திருந்தார்.
ஆனால் கூட்டணிக்கு பின்னரும் அதிமுகவை ஒன்றுபடுத்த பாஜக முயற்சித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் முக்கியமானவர் செங்கோட்டையன் தான். நானும், அவரும் ஜெயலலிதாவின் சொல்படி அனைத்து பணிகளையும் முன் நின்று செய்துள்ளோம்.
அதிமுக ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று 2 கோடி தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள். அதனால் செங்கோட்டையனின் முயற்சி வெற்றிபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா மீது பாஜக அன்பு வைத்திருக்கிறது. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றுதான் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் விரும்புகின்றனர். ஆனால் தனிப்பட்ட நபரின் விருப்பு, வெறுப்பு காரணமாக அதிமுக இணைப்பு தடையாக இருக்கிறது. என்னதான் அள்ளிக் கொண்டு செல்லப் போகிறார் என்று தெரியவில்லை. அதனால் அதிமுக நிச்சயம் ஒன்றுபட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். பாஜக மூத்த தலைவர்கள் எங்களுடன் நல்ல எண்ணத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதிமுக ஒன்றுபட விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications