கடைசியில் நிலைமை இப்படியாகிபோச்சே.. அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி தராதீங்க.. போலீசுக்கே போன ஓபிஎஸ்
சென்னை: அதிமுக பொதுக் குழுவுக்கு அனுமதி தரக் கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக் குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி அன்று வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுவாக கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள், முன்னாள் மாவட்டக் கழக செயலாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழுவிற்கு அழைப்பது என்கிற நடைமுறை எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
இருப்பினும் அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் கடந்த 14 ஆம் தேதி அன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுக் குழு நடைபெற்ற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவல் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.

விளக்கம்
கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்த பிறகு முன்னறிவிப்பு இல்லாமல் சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சில தலைமைக் கழக நிர்வாகிகளால் கூட்டத்தில் முடிவு செய்யப்படாத பொருள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கழகத் தொண்டர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

தலைமைக் கழகம்
இதனைத் தொடர்ந்து ஜூன் 18ஆம் தேதி அதே தலைமைக் கழகத்தில் கட்சித் தொண்டர்கள் போர்வையில் சில சமூகவிரோதிகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இந்தத் தகவலை அறிந்த கழக உடன்பிறப்புகள் என்னைத் தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் சந்தித்து பொதுக் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது என்பது காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு என்றும் இது போன்ற தருணத்தில் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கருத்து தெரிவிப்பார்கள் என்றும் அக்கருத்து சிறப்பு அழைப்பாளர்களாக வரும் மூத்த முன்னோடிகளால் கழக வளர்ச்சிக்கு பயன்பட்டது என்றும் இதே மண்டபத்தில் ஜெயலலிதா பல முறை கழகத்தின் பொதுக் குழுக் கூட்டங்களை நடத்திய போதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டதாகவும் எனவே இடமில்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

செயற்குழு கூட்டம்
மேலும் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்திற்கான தீர்மானங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ள நிலையில் கூட்டத்தை நடத்துவது பொருத்தமானதாக இருக்காது என்றும் கூட்டத்திற்கான பொருள் நிர்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

குழப்பமான சூழல்
கடந்த ஜூன் 18 ஆம் தேதி அன்று தலைமைக் கழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறின. இதன் காரணமாக கழகத் தொண்டர்கள் கொதித்து போயுள்ளனர். கழக நிர்வாகிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் குழப்பான சூழ்நிலை நிலவுவதோடு கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை
இந்த அசாதாதரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதையடுத்து கழகத் தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். அதிமுகவின் சட்டவிதிகளுக்கு மாறாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அனுமதி கோரியுள்ளார். பெஞ்சமின் பாதுகாபபு கோரியது தன்னிச்சையான முடிவு என்பதால் அனுமதி மறுக்க வேண்டும். பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதத்தின் நகர் வானகரம் திருமண மண்டபத்தின் மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இபிஎஸ் தரப்பு திட்டவட்டம்
ஓபிஎஸ் கையெழுத்திட்ட மனு ஆவடி ஆணையரகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுக் குழுவை தள்ளி வைக்க ஏற்கெனவே இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி வரும் 23 ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என இபிஎஸ் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏடாகூட கேள்வி.. சட்டென டென்ஷனான பெரியகருப்பன்












Click it and Unblock the Notifications