படத்தில் முதலில் என்ன விலங்கு தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்களுக்குள் மறைந்து இருக்கும் பவரை சொல்றோம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள் அதை வைத்து உங்க கேரக்டர்களை ஓரளவு கணித்துவிடலாம். இந்த படத்தில் முதலில் குரங்கு தெரிகிறதா? அல்லது சிங்கத்தின் தலை தெரிந்ததா? என்று சொல்லுங்கள் உங்களுக்குள் மறைந்து இருக்கும் பவரை சொல்றோம்.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்களுக்கு இணையத்தில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. படத்தில் இருக்கும் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது...படத்தில் முதலில் என்ன தெரியுது என்பதை வைத்து ஒருவரின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என கணிப்பது என்பன போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடிக்கின்றன.

அந்த வகையில்தான் இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷதின் படத்தில் முதலில் என்ன தெரிகிறது என்பதை வைத்து அவருடைய பிரைன் சூப்பர் பவர் என்ன என்பதை ஓரளவு சொல்லிவிடலாம்... என்ன ரெடியா... இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை நன்கு உற்று பாருங்கள்.. படத்தில் உங்கள் கண்ணுக்கு முதலில் குரங்கு தெரிகிறதா அல்லது புலியின் முகம் தெரிகிறதா என்று சொல்லுங்கள்.. உங்கள் மூளையின் சக்தி எப்படிப்பபட்டது என்று சொல்கிறோம்.

 Optical Illusion: what you see in this image reveals you your hidden brain power

குரங்கு தெரிந்தால்: உங்கள் கண்ணுக்கு முதலில் குரங்கு தெரிந்தால், உங்கள் மூளையின் வலது பகுதி இடதுபக்கத்தை விட ஆக்டிவாக செயல்படுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். வலது மூளை செயல்பாடு அதிகம் கொண்டவர்கள் எதையும் புதுமையாக உருவாக்க நினைப்பவர்களாக இருப்பார்கள்.

ஒரு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றாலும் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதை சார்ந்தே செயல்படுவீர்கள். இது உங்களை அடிக்கடி சரியான திசைக்கு செல்ல வழிவகுக்கும். உங்களை பொறுத்தவரை இலக்கை விட பயணமே முக்கியமானது என்று கருதுவீர்கள். தோல்விகள் அனைத்துமே உங்களை வழிநடத்துவதற்கான படிக்கட்டுகள் என்ற தத்துவத்தை பின்பற்றும் நபராக இருப்பீர்கள். இயற்கையாகவே கற்பனை ஆற்றல் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.

சிங்கத்தின் தலை தெரிந்தால்: உங்கள் கண்ணிற்கு சிங்கத்தின் தலை தெரிந்தால்... நீங்கள் இடது மூளை செயல்பாடு அதிகம் கொண்டவர்களாக இருக்க கூடும். எதையும் உரிய முறையில் திட்டமிட்டு செயல்படும் நபராக இருப்பிர்கள். இலக்கை நோக்கி பயணிப்பதில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். சரியான திட்டமிடலும் சவாலை எதிர்கொள்வதை அதிகம் விரும்பும் நபராக இருக்கலாம்.

எதாவது பிரச்சினையை சந்திக்க நேர்ந்தால் தெளிவான திட்டமிடலுடன் அதை அணுகும் எண்ணம் மேலோங்கி இருக்கும். எதை செய்தாலும் தீர ஆய்ந்து இறங்கும் நபராக நீங்கள் இருப்பீர்கள். இதனால், உங்களின் முடிவில் பிடிவாதம் காட்டும் நபராகவும் இருக்க சான்ஸ் உள்ளது. இருந்தாலும் பிறருடைய கருத்தை கேட்கவும் தயக்கம் காட்ட மாட்டீர்கள். கொஞ்சம் பணிவுடன் செயல்படுவதை கடைபிடித்தால் உங்களிடம் முடிவு எடுக்கும் திறனும், நட்பு வட்டமும் விரிவடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+