படத்தை பார்த்தவுடன் எந்த விலங்கு தெரிஞ்சுதுன்னு சொல்லுங்க.. உங்க கேரக்டர் என்னன்னு நாங்க சொல்றோம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் நரி, புலி, ஆந்தை, நாய்க்குட்டி, கோப்ரா, சிங்கம், வவ்வால் ஆகியவை மறைந்து இருக்கின்றன. இந்த படத்தில் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள் உங்க கேரக்டர் எப்படி இருக்குன்னு இங்கே தெரிஞ்சிக்கலாம்.
ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. இந்த புதிர் போடும் இல்யூஷன் படங்கள் போல, கேரக்டர் ஆப்டிகல் இல்யூஷன்களுக்கும் தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு படத்தை பார்க்கும் விதம், அதை புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றை வைத்து ஒவ்வொரு நபரின் ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை ஓரளவு கணித்து விடலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.

எனவே நம்முடைய கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் பலரும் ஆர்வம் காட்டுவதைக் காண முடிகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். நாம் இன்று பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள்.. அதை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்க வாய்ப்புள்ளது என்பதை இங்கே அறியலாம்..
நரி தெரிந்தது என்றால்: உங்கள் கண்களுக்கு முதலில் நரி தெரிந்தது என்றால், உங்கள் கேரக்டர் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். அதாவது, நீங்கள் மிகவும் விசுவாசமாகவும் அர்ப்பணிப்பு மிக்கவராகவும் இருப்பீர்கள். ஆனால், உங்கள் உண்மையான கேரக்டரை யாரிடமும் வெளிக்காட்ட மாட்டீர்கள். உடனடியாக யாரிடமும் நெருங்கி பழகிவிடுவீர்கள்.. அவர்களை அளவுக்கதிமாக நம்பி விடுவீர்கள். ஆனாலும் உங்களின் உண்மையான கேரக்டரை திரை போட்டு மறைத்தே வைத்திருப்பீர்கள்.

புலி தெரிந்தது என்றால்: உங்கள் கண்ணுக்கு புலி தெரிந்தால்.. போராட்ட குணம் மிகுந்தவராக இருப்பீர்கள். வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து வந்திருக்கும் நபராக இருக்கலாம். நீங்கள் நினைப்பதை விட வலிமை மிக்கவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.
உங்கள் கண்களுக்கு ஆந்தை தெரிந்தால்: படத்தில் மறைந்து இருக்கும் ஆந்தை உங்கள் கண்களுக்கு தெரிந்தால்.. நீங்கள் உங்கள் ஆர்வம், பேஷன் போன்றவற்றை யாரிடமும் அதிகம் வெளிக்காட்டாத நபர்களாக இருப்பீர்கள். இயல்பாகவே நீங்கள் மிகவும் ஆர்வமுள்ள நபராகவும் அறிவாற்றல் மிக்க நபராகவும் இருப்பீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்கள் கூட உங்களைப்பற்றிய உண்மையான கேரக்டரை அறிந்து இருக்க மாட்டார்கள்.
நாய்க்குட்டி முதலில் தெரிந்தால்: உங்கள் கண்ணுக்கு நாய்க்குட்டி தெரிந்தால்.. இயல்பாகவே நீங்கள் மிகவும் கருணை மனம் கொண்டவர்கள். எந்த நிபந்தனையும் இன்றி உங்களுக்கு பிடித்தமானவர்களை நேசிப்பீர்கள். உங்களின் இந்த குணத்தை யாரும் சரிந்து கொள்ள மாட்டார்கள்...

சிங்கம் தெரிந்தது என்றால்: உங்கள் கண்ணுக்கு சிங்கம் தெரிந்தது என்றால் உங்கள் கேரக்டர் இப்படித்தான் இருக்கும்.. அதாவது, நீங்கள் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவராக இருக்கலாம். உங்கள் கோபத்தை கூட வெளிக்காட்ட கொஞ்சம் யோசிப்பீர்கள். கோபப்படுவது அநாகரீமானது என்பது உங்களின் எண்ணமாக இருக்கும். உங்களின் இந்த எண்ணமே உங்களுக்கு கொஞ்சம் பலவீனமானது ஆகும்.
கோப்ரா தெரிந்தால்: உங்கள் கண்ணுக்கு கோப்ரா தெரிந்தால்... உங்கள் கேரக்டர் இப்படித்தான் இருக்கும்... உங்களின் தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பு ஆகியவற்றை வெளியில் அதிகம் காட்டிக்கொள்ள மாட்டீர்கள்.











Click it and Unblock the Notifications