Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரஞ்சு கலர் வந்தே பாரத்.. சென்னையில் இருந்து எங்கே கிளம்பி வரப்போகுது தெரியுமா குஷியில் திருநெல்வேலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரஞ்சு நிற வந்தேபாரத் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதால், அதற்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்தபடியே உள்ளன.

அதேசமயம், ரயில்வே கருத்துகளின் அடிப்படையில் வந்தே பாரத் ரயில்களிலும் அவ்வப்போது மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில், குறைந்த கட்டணத்தில் சாதாரண் வந்தே பாரத் வரப்போவதாக சொல்கிறார்கள். அடுத்தாக, ஆரஞ்சு நிறத்தில் அதாவது குங்குமப்பூ நிறத்தில் வந்தே பாரத் ரயிலை தண்டவாளத்தில் இயக்கியுள்ளது.

Orange color new Vande Bharat Train and Will Orange Color Vande Bharat be directed to southern regions

8 பெட்டிகள் கொண்ட புதிய வந்தே பாரத் ரயிலின் வெளிப்புறம் காவி நிறத்தில் இருக்கும் என்றும், இதில், இருக்கை அமைப்பில் இருந்து கழிப்பறை விளக்குகள் வரை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்தன.

பயணிகளுக்கு, சாய்வு நாற்காலியில் பயணம் செய்வது இன்னும் வசதியாக இருக்கும், சிறந்த சார்ஜிங் சிஸ்டம் கிடைக்கும், வாஷ்பேசின் ஆழம் அதிகரிக்கப்பட்டுள்ளது, இருக்கையின் சாய்வு கோணம் அதிகரிக்கப்பட்டுள்ளது, என்றெல்லாம் செய்திகள் வந்தன.

காவி நிறம்: மேலும், காவி நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட இந்த ஆரஞ்சு நிற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 19ம் தேதி வரப்போவதாகவும் இது சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியிலும் தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் புதிய வண்ணம் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே கூறியிருந்தார். அப்போழத, மூவர்ணக் கொடியின் அடிப்படையில் இந்த ரயிலின் வண்ணம் அமையும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயிலை, தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்து, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த ரயிலை தென் மாவட்டங்களுக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை பெரம்பூர் ஐசிஎப்-பில் சமீபத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில், தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வந்தே பாரத்: இது குறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "தெற்கு ரயில்வே, கிழக்கு கடற்கரை ரயில்வே, மேற்கு ரயில்வேக்கு தலா ஒரு வந்தே பாரத் ரயில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை தலா 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். பயணியர் தேவை அதிகமாக உள்ள சென்னையில் இருந்து தென்மாவட்ட தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் எறு கோரிக்கைகள் வலுவாகி உள்ளன..

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள, 740 கி.மீ., வழித்தடத்தில் சென்னை - திருநெல்வேலி இடையே முழுதும் மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகல ரயில் பாதை உள்ளது. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க ஏற்கனவே வாரியத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறோம்.. எனினும், ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயிலை, எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை" என்றார்கள்.

புதிய வசதிகள்: புதிய வசதிகள் கொண்ட ரயில் சேவை, தென் மாவட்டங்களுக்கு இல்லாதது ஏமாற்றம் தரும் நிலையில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+