ஒரு நபர் உயிரோடு இருக்கும்போது பதிவதே போதும்.. குடும்பத்தினர் ஒப்புதலின்றி உடல் தானம்.. புது சட்டம்?
சென்னை: உயிருடன் இருக்கும்போது முறையாக பதிவு செய்தவரின் கண் மற்றும் உடலை தானம் பெறுவது குறித்த புதிய சட்டத்திருத்தம் விரைவில் வரவுள்ளதாக தெரிகிறது.. இதுதொடர்பாக மத்திய அரசு தீவிரமான ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
உயிருள்ள ஒருவர் தன்னுடைய உறுப்புகளில் ஒன்றை தேவைப்படும் பிறருக்கு தானமாக வழங்குவது அதிகரித்து வருகிறது.. குறிப்பாக, 2 சிறுநீரகத்தில் ஒரு சிறுநீரகம் தானமாக தரப்படுகிறது. ஆனால், இறந்தவர் உறுப்புகள் தானமாக வழங்கப்படுவதே உடலுறுப்பு தானமாகும்.

மூளைச்சாவு: மூளைச் சாவு என்று அறிவிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்படுவதுதான் இந்த உடல் உறுப்பு தானம்.. மூளைச்சாவு அடைந்த நபரின் உறுப்புகளை தானம் பெற வேண்டுமானால், மூளைச்சாவு அடைந்த குடும்பத்தினரின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். அத்துடன், உறுப்புகளை தானம் செய்ய மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவால் மூளைச்சாவு நடந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
இதயம்,கல்லீரல், சிறுநீரகம், கணையம், நுரையீரல், குடல் ஆகிய உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தானம் செய்யலாம்... ஆனால், குடும்ப உறுப்பினர்களின் சம்மதம் இல்லாமல் உடல் உறுப்பு தானம் செய்ய முடியாது... இந்திய சட்டத்தின்படி உறுப்பு தானம் செய்வதற்கு குடும்பத்தினரிடமிருந்து முன் அனுமதி தேவை.
கண்கள் தானம்: இந்நிலையில், உயிருடன் இருக்கும்போது முறையாக பதிவு செய்தவரின் கண் மற்றும் உடலை அவரது இறப்புக்கு பிறகு அவர்களின் உறவினர்கள் ஒப்புதல் இல்லாமல் தானம் பெறும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்போவதாக கூறப்படுகிறது.. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனையும் நடத்தி வருகிறது.
இதற்கு காரணம், இறந்தநபர் உயிருடன் இருக்கும்போது கண் தானம் செய்வதாக பதிவுசெய்து இருந்தாலும், உறவினர்களின் ஒப்புதல் கட்டாயமாகும். ஆனால், உயிருடன் இருக்கும்போது சுயநினைவுடன் ஒருவர், தன்னுடைய இறப்புக்கு பிறகு கண்களை தானம் கொடுப்பதாக பதிவு செய்திருந்தாலும், அவர் இறந்ததுமே, அவரது கண்களை தானம் அளிக்க பெரும்பாலான உறவினர்கள் முன்வருவதில்லையாம்.. இதனால், கண்கள் தானமாக கிடைப்பதில் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடுகிறது.
கண்தானம்: இதனால், வருடந்தோறும் பார்வையற்றவர் எண்ணிக்கையும் பெருகி வருகிறது எவ்வளவுதான், கண் தானம் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் போதிய பலன்கள் கிடைப்பதில்லை. அதனால்தான், மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று சட்டம்-1994 சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது..
அதன்படி, இறந்த நபர் உயிருடன் இருக்கும்போது கண்களை தானம் செய்வதாக விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தால், உறவினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே இறந்தவர்களின் கண்களை தானமாக பெற முடியும் என்பதே புதிய சட்டதிருத்தமாகும்..
சட்டத்திருத்தம்: அதுமட்டுமல்ல, ஒருவர் உயிருடன் இருக்கும்போது தன்னுடைய இறப்புக்கு பிறகு உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக விருப்பம் தெரிவித்து பதிவு செய்தாலும், உறவினர்களின் ஒப்புதலின்றி, அவரது உடலை மருத்துவக் கல்லூரியால் பெற்றுக் கொள்ள முடியும், இந்த சட்டத்திருத்தத்தைதான் மத்திய அரசு ஆலோசித்து வருகிறதாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications