கவனிச்சீங்களா? திமுக, அதிமுக மட்டும்தான் இருக்கு.. களத்தில் சுவாரசிய ட்விஸ்ட்.. இதை எதிர்பார்க்கலையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி தவிர மற்ற கட்சிகள் அவர்களின் கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக சுணங்க தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

Other than DMK and AIADMK Why other parties are losing interest in Lok Sabha election campaign

இன்றும் நாளையும் மட்டுமே தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடியும். இதனால் கடைசி கட்ட பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன.

திமுக பிரச்சாரம்: திமுக சார்பாக தமிழ்நாடு முழுக்க மிக தீவிரமாக இறுதிக்கட்ட பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்கள். மாவட்ட வாரியாக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அவர்களுக்கான பொறுப்பு தொகுதிகளில் அமைச்சர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திமுக பிரச்சாரம் தமிழ்நாட்டில் இப்போதுதான் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. நேரடியாக வீடு வீடாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் ஆளும் கட்சி என்பதால் திமுகவிற்கு அதிகார பலம் + பண பலம் + அரசு பலம் + ஆள் பலம் உள்ளது.

அதன் காரணமாகவே திமுகவின் பிரச்சாரம் தற்போது சுணங்காமல் மிக தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது.

அதிமுக பிரச்சாரம்: அதிமுக பிரச்சாரமும் கொங்கு மண்டலத்தில் மிக தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது . கோவையில் பிரச்சாரம் தீவிரம் அடைந்து உள்ளது . பொள்ளாச்சியில் அதிமுக மிக வலிமையாக இருக்கிறது. அங்கே கடுமையாக பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறது.

இன்னொரு பக்கம் வடக்கு தமிழ்நாட்டிலும் அதிமுக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளது. ஈரோட்டிலும் அதிமுகவிற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் அங்கே அதிமுக பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது.

ஆனால் லோக்சபா தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுகவினர் சுணக்கம் காட்ட தொடங்கி உள்ளனர். பெரும்பாலான இடங்களில் வீடு வீடாக அவர்கள் பிரச்சாரம் செய்வது இல்லை.

வீடுகளுக்கு சென்று வாக்கு கேட்பது இல்லை என்று புகார் உள்ளது. எடப்பாடி பழனிசாமி வருகிறார். கூட்டம் நடத்துகிறார். அவர் இப்போது சென்னை போய்விட்டார் . அவர் போன பின் ஓரிரு நாட்கள் நிர்வாகிகள் உற்சாகமாக இருக்கிறார்கள். அதற்கு பின் அவர்கள் எந்த விதமான பணிகளையும் செய்வது இல்லை.

மற்ற கட்சிகள் சோம்பல்: அதிமுக, திமுகவை தவிர மற்ற கட்சிகள் பெரும்பாலும் பெரிய அளவில் பணிகளை செய்யவில்லை. நாம் தமிழர் தொடக்கத்தில் காட்டிய வேகத்தை இப்போது பிரச்சாரத்தில் காட்டுவது இல்லை.

இது போக பாஜகவில் கோவையை தவிர எங்குமே தேர்தல் நடக்காதது போல பிரச்சாரத்தை கோவையில் மட்டுமே சுருக்கி உள்ளனர். நெல்லையில் கூட பாஜகவினர் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை. கோவைக்குள் மட்டும் பாஜக பிரச்சாரத்தை சுருக்கி கொண்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+