மாஸ்! உச்சபட்ச மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்.. திமுக அரசின் திட்டத்தால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை!
சென்னை: முதல் தலைமுறை பட்டதாரிகள் நல்ல வேலைக்கு செல்வதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களைச் சுட்டிக்காட்டி மகிழ்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்த நாளன்று 'நான் முதல்வன்' என்னும் புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சி வகுப்புகள் ஏழை எளிய மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், இது எனது கனவுத் திட்டம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மாணவர்களையும், இளைஞர்களையும் முதல்வனாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வி உதவித்தொகை தொடங்கி, வேலைவாய்ப்பு வரை பல்வேறு விஷயங்களை நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழக அரசு செய்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக https://naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள படிப்புகள், கல்லூரிகள், நுழைவுத் தேர்வுகள், உதவித்தொகை, கல்விக் கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த தகவல்கள் விரிவாக உள்ளன.
மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் எளிதாக கல்விக் கடன் பெறுவது குறித்த வழிமுறைகளும் நான் முதல்வன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புகள் என்னென்ன என்ற விவரங்களும் நான் முதல்வன் வழிகாட்டி பக்கத்தில் கொடுக்கப்படுக்கிறது. தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், மத்திய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு வருகின்றன.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் தயாராவதற்காக 1000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 வழங்கப்படுகிறது. முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது. இப்படியாக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன் வேலைவாய்ப்பு திட்டம் 2024' மூலம் சேலம், கள்ளக்குறிச்சி அரியலூர், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். 2022-23 நிதியாண்டில், இத்திட்டத்தின் மூலம் 1.19 லட்சம் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெற்றிருந்தனர் என்று ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை வெளியாகியுள்ளது.
மனநிறைவு தரும் செய்தி!
— M.K.Stalin (@mkstalin) February 9, 2024
இந்த வெற்றிப் பயணம் தொடரும்...
தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது #DravidianModel-இன் நோக்கம்! நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்!https://t.co/FKvU1Z8uMN pic.twitter.com/RRGaf25POH
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "மனநிறைவு தரும் செய்தி. இந்த வெற்றிப் பயணம் தொடரும். தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது திராவிட மாடல் அரசின் நோக்கம். நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
4 மாவட்டங்களில் இருந்து கலை - அறிவியல் கல்லூரிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான இறுதி ஆண்டு மாணவர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டம் மூலமாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ள செய்தியைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு தனது மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications