24 கட்சிகள் இருக்க திமுகவை மட்டும் தாக்கிய மோடி.. காரணம் இதுதான்? ஸ்டாலினின் 7 மாஸ்டர்பிளான்!
சென்னை: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் இன்று கலந்து கொள்ளும் நிலையில் திமுகவை மட்டும் தனியாக தாக்கி பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இதற்காக பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை கூடுதல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன

காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. இன்று நடக்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
24 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன. சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே மற்றும் எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் இந்த மிக முக்கியமான கூட்டத்தில் பங்கேற்பார்கள். நேற்று முதல் கட்டமாக இரவு நேர விருந்து கொடுக்கப்பட்டு விருந்திற்கு இடையே சிறிய அளவிலான ஆலோசனைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.
எதிர்கூட்டம்: இந்த நிலையில் எதிர்கட்சியின் பாட்டுக்கு இசைப்பாட்டு பாடுவது போல பாஜகவும் சிறு சிறு கட்சிகளை வைத்து கூட்டணி அமைத்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைமையில் டெல்லியில் இன்று தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையிலான கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில்தான் அந்தமானில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் இன்று கலந்து கொள்ளும் நிலையில் திமுகவை மட்டும் குறிப்பிட்டு தனியாக தாக்கி பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
அதில், எதிர்க்கட்சிகள் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெங்களூருவில் ஊழல்வாதிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுகவுக்கு நற்சான்றிதழை கொடுத்துள்ளன.
அரசு என்பது குடும்பத்திற்காக குடும்பம் மூலம் நடத்தப்படுவது என்பதே இவர்களின் முழக்கம். ஊழல்வாதிகளைப் பாதுகாக்க இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன.. அவர்களுக்கு குடும்பம் தான் முதன்மையானது, தேசம் ஒன்றும் இல்லை, என்று திமுகவை தாக்கி பேசி உள்ளார்.

திமுகவை மட்டும் இப்படி மோடி தாக்க பின்வரும் விஷயங்கள் காரணமாக கூறப்படுகின்றன. அதன்படி 1. எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதில் திமுக பங்கு வகிக்கிறது. 2. பல மாநிலங்களில் பாஜக தோல்வி அடைய காரணமான பெண்களுக்கு ரூ.1000, இலவச பஸ் போன்ற திட்டங்களின் மாஸ்டர்மைண்ட் திமுகதான். 3. தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி பார்முலாவை தேசிய அளவில் கொண்ட செல்ல திமுக நினைக்கிறது.
4. காங்கிரஸ் கட்சியுடன் நட்பாக உள்ள திமுக மற்ற கட்சிகள் காங்கிரசுடன் இணைய பாலமாக உள்ளது. 5. தேசிய அளவில் எப்படி கூட்டணி உருவாக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை கொள்கைகளை வழங்குகிறது. 6. கொள்கை ரீதியாக பாஜகவை பெரிதாக கட்சிகள் எதிர்க்காத நிலையில் திமுகவின் கொள்கை பாஜகவின் கொள்கைக்கு அப்படியே எதிராக உள்ளது. 7. மாநில சுயாட்சி என்ற கொள்கையை பல மாநிலங்களுக்கு கடத்துகிறது.. இந்த 7 விஷயங்கள்தான் பாஜகவை அச்சுறுத்துவதால் நேரடியாக திமுகவை மோடியே தாக்க தொடங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.
இப்போது அந்தமானில் தாக்கி பேசிய அவர் சமீபத்தில்தான் போபாலிலும் திமுகவை தாக்கி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய சில பிளானிங்கும் பாஜகவின் இந்த அட்டாக் மோடிற்கு முக்கிய காரணம் ஆகும்.
ஸ்டாலின் பிளான்: முதல்வர் ஸ்டாலின் கடந்த முறை இந்த கூட்டத்தில் தெரிவித்த 7 திட்டங்களை இந்த முறை கூட்டத்தில் அழுத்தி சொல்வார், அது தொடர்பான விரிவான திட்ட விளக்கங்களை அளிப்பார் என்று கூறப்படுகிறது.
கடந்த கூட்டத்தில் திமுக கட்சி முக்கியமான 7 ஐடியாக்களை கொடுத்தது. அதன்படி 1) ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக உள்ள ஒரு கட்சியின் தலைமையில் மாநில வாரியாக கூட்டணி அமைக்கலாம். அதாவது எந்த மாநிலத்தில் எந்த கட்சி பெரிய கட்சியோ அவர்கள்தான் கூட்டணிக்கு தலைவர்கள். 2) அது சாத்தியமில்லை என்றால், நேரடிக் கூட்டணி இல்லாமலேயே சீட்-பகிர்வு ஏற்பாடு செய்யலாம். உதாரணமாக கூட்டணி இல்லை அதே சமயம் ஒரே இடத்தில் இரண்டு கட்சிகளும் எதிர்த்து போட்டியிட கூடாது. கேரளா போன்ற மாநிலங்களில் இது சாத்தியம்.
3) இரண்டும் சாத்தியமில்லை என்றால், ஒரு பொது வேட்பாளரை அறிவிக்கலாம். மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இது சாத்தியம். 4) தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சரியான முடிவாக இருக்காது. தேர்தலுக்கு முன்பே நட்பை உறுதிசெய்ய வேண்டும். 5) அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே பொதுவான குறைந்தபட்ச தேர்தல் பிளான் வகுக்கப்பட வேண்டும்.
6) கட்சிகளுக்கு இடையே எழக்கூடிய ஏதேனும் பிரச்சனைகளை தீர்க்க, ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்படும். இந்த குழு மட்டுமே கூட்டணி மோதல் பற்றி கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். 7) பிரதமர் வேட்பாளர் குறித்து இப்போது முடிவு எடுக்க வேண்டியது இல்லை, என்பது உள்ளிட்ட ஐடியாக்களை திமுக கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று நடக்கும் கூட்டத்திலும் பெங்களூரில் பேசுவார் என்று கூறப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications