தமிழ்நாட்டில் 47 லட்சம் பேருக்கு.. 1 வாரத்தில் அனுப்பப்படும் ரூ.2000.. சுடசுட ரெடியான சூப்பர் லிஸ்ட்
சென்னை: பிஎம்-கிசான் சம்மான் நிதி திட்டத்தின் அடுத்த கட்ட தவணைத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு செலுத்த உள்ளது.டிசம்பர் மாதம் வழங்கப்பட வேண்டிய தொகை.. அடுத்த வாரம் முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட லிஸ்ட் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் பல லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ளனர்.

பிஎம்-கிசான் திட்டம்: யாருக்கெல்லாம் பணம் வழங்கப்படும்?
தமிழகத்தில் சுமார் 47 லட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 3.24 லட்சம் விவசாயிகள் இந்தத் தவணைத் தொகையினைப் பெற்றுள்ளனர்.
பிஎம்-கிசான் திட்டம் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று சம தவணைகளாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பயன் பரிமாற்றம் (டிபிடி) மூலம் செலுத்தப்படுகிறது. முன்னதாக, கிருஷி சகி ஒருங்கிணைப்புத் திட்டத்தின் (KSCP) கீழ் 30,000-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களில் (SHGs) உள்ள பெண்களுக்கு 'கிருஷி சகிஸ்' என்ற சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதுவரை, சுமார் 9.25 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் மத்திய அரசு செலுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் ரூ.3.24 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
பிஎம்-கிசான்: யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
கடந்த ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்ட நிதியின் மூலம், பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்தப் பலன்கள் ரூ. 3.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2019-ல் தொடங்கப்பட்டதில் இருந்து 11 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயக் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள சுமார் 9.26 கோடி பயனாளிகளுக்கு ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பணம் வழங்கப்பட்டு உள்ளது.
பிஎம்-கிசான்: அதிகாரப்பூர்வ PM Kisan இணையதள பக்கம்
பிஎம்-கிசான் திட்டத்தில் பணம் பெற நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். மேலும், உங்களிடம் வங்கி கணக்கு இருக்க வேண்டும். உங்கள் வங்கி கணக்கை கேஎப்சி உடன் சரிபார்த்து இருக்க வேண்டும். அதோடு உங்கள் தொலைபேசி எண்ணை வங்கி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். இந்தத் திட்டம் மூலம் உங்களுக்கு பணம் வந்துள்ளதா என்பதைச் சரிபார்க்க, கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:
படி 1: அதிகாரப்பூர்வ PM Kisan இணையதள பக்கத்தில் லாக் இன் செய்யவும்.
படி 2: லாக் இன் செய்தவுடன் Beneficiary Status Page என்ற பக்கம் காட்டும். அந்த பக்கத்திற்கு செல்லவும்.
படி 3: அங்கே உள்ள "Beneficiary Status" என்பதைக் கிளிக் செய்தால் அடுத்த பேஜ் திறக்கும்.
படி 4: நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இருந்தால் உங்கள் லாக் இன் கணக்கை எடுத்து வைத்துக்கொள்ளவும். அதை பயன்படுத்தி உங்கள் ஆதார் எண் அல்லது அக்கவுண்ட் எண் மூலம் உள்ளே செல்ல முடியும்.
படி 5: அந்த பக்கத்தில் "Get Data" என்பதைக் தேர்வு செய்து உங்கள் விவரங்களை பார்க்கலாம். நீங்கள் திட்டத்தில் இருக்கிறீர்களா என்பதை சோதனை செய்ய முடியும்.
படி 6: இதிலேயே உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதையும் பார்த்து சோதனை செய்து கொள்ள முடியும்.
பிஎம்-கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த நிதி உதவி, அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications