"தூக்கிட்டு போய்டுங்க.. ஆக்ஸிஜன் இல்லை.. முடியலை"..அதிர வைக்கும் உ.பி.. திணறும் யோகி!
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் லக்னோ திணறுகிறது
சென்னை: "எங்க கிட்ட ஆக்ஸிஜன் தீர போகுது.. இனி கஷ்டம்.. வேற எங்காவது தூக்கிட்டு போயிடுங்க" என்ற கையை விரித்து டாக்டர்கள் சொல்ல.. அதை கேட்டு, நோயாளிகளின் உறவினர்களின் கதறல் விண்ணை முட்டுகிறது.. மற்றொரு பக்கம் ஆக்ஸிஜனை பெற்று கொள்ள, நோயாளிகளுடன் வரிசையில் நிற்கும் அவலம் நெஞ்சை பிசைகிறது.. இன்னொரு பக்கம் இறந்தவர்களை எரிக்க இடமில்லாமல், சடலங்களுடன் ஆம்புலன்ஸ்கள் கியூவில் நிற்பதை பார்த்து இதயமே வெடித்து சிதறுகிறது.. இதெல்லாம் யோகியின் லக்னோவில் நடந்து வரும் காட்சிகளாகும்...!
உத்தரபிரதேசத்திலும் நடந்து வருகிறது.. ஆஸ்பத்திரிகளில் இப்போது ஆக்ஸிஜன் வாங்குவதற்குதான் மக்கள் வரிசையில் காத்து கிடக்கிறார்கள்..
அதுவும் தனிநபர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன... மூச்சு திணறி கொண்டிருக்கும், தங்கள் பந்தங்களுக்காக ஆக்சிஜன் வாங்க முடியாமல் பலர் தவித்து போய் உள்ளனர்.

அறிவிப்பு
"எங்க ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தீர போகிறது... இதனால் நோயாளிகள் உடனடியாக வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றி கொள்ளுங்கள் என்று செய்தி குறிப்பை வெளியிட்டது பெரிதும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.. இதை அறிவிப்பை கேட்டு, நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் பெரும் பரபரப்பை அடைந்தனர்.. இதுபோல பல இடங்களில் ஆக்ஸிஜன் முடிந்துவிட்டது என்று நோட்டீஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது..

போர்டுகள்
நேற்று முழுவதும் லக்னோ ஆஸ்பத்திரிகளின் நிலைமைகளை பார்க்கவே படுமோசமாக இருந்தது.. ஒருபக்கம் ரிஜிஸ்தர் செய்யப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்க கால்கடுக்க காத்து நின்றனர்.. மற்றொரு பக்கம், சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர்களே ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஆஸ்பத்திரிக்கு பதட்டத்துடன் நுழைகிறார்கள்.. இன்னொரு பக்கம், சிவில் ஆஸ்பத்திரியில் உள்ள கோவிட் வார்டில் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் நோயாளிகளின் மூச்சுக்கள் திணறி கொண்டிருக்கின்றன.

நோயாளிகள்
நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை பெற்று வருவதற்கு நோயாளிகளின் உறவினர்கன்ள ஆக்ஸிஜன் நிரப்பும் நிலையங்களுக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.. இதனால் அந்த நிலையங்கள், திரண்டு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. பல கொரோனா நோயாளிகள், ஆக்ஸிஜனுக்காக காத்திருந்து உயிரைவிடும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது..

உயிரிழப்பு
நேற்று ஒருநாளில் மட்டும் 37,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. மேலும் 196 பேர் கொரோனாவுக்கு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதில், லக்னோவில் மட்டும் 14 பேர் இறந்துள்ளனர்.. இதில் கொடுமை என்னவென்றால், இதுவரை தொற்றினால் இறந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில், தற்போது ஆக்ஸிஜனின் பற்றாக்குறையால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது..
Recommended Video

சடலம்
இறந்தவர்களை அடக்கம் செய்யவும் முடியாமல் உபி அரசு திணறி கொண்டிருக்கிறது.. இதனால் மயானம் கிடைக்காமல், ஆம்புலன்ஸ்களில் சடலங்களை வைத்து கொண்டு கியூவில் நிற்கிறார்கள்.. பல்வேறு இடங்களில் மைதானங்களில் கொரோனா நோயாளிகளின் சடலங்களை வைத்து எரித்து வரும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications