Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு பணியை பாதியிலேயே முடித்து கொண்டு மீண்டும் தமிழகம் திரும்புகிறார் அமுதா ஐஏஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐஏஎஸ் தனது பதவிக்காலத்தை பாதியிலேயே முடித்து கொண்டு மீண்டும் தமிழகம் திரும்புகிறார். இதற்கான ஆணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அமுதாவின் மீதமுள்ள பணிக் காலத்தை மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான புன்யா சலீலா ஸ்ரீவத்சவா மேற்கொள்வார்.

தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு மாபெரும் ஜாம்பவான்களிடம் நற்பெயரை பெற்ற அமுதா ஐஏஎஸ், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக பணியாற்றிய நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.

இதையடுத்து இவர் கடந்த ஆண்டு பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அமுதா ஐஏஎஸ்ஸை பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு மீண்டும் அவரை தமிழகத்திற்கே திருப்பி அனுப்பவதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..

தமிழகம்

தமிழகம்

அவருக்கு பதிலாக மீதமுள்ள பணிக்காலத்தை மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான புன்யா சலீலா ஸ்ரீவத்சவா மேற்கொள்வார் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்காலம் முடிவதற்கு முன்பே அமுதா ஏன் மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார் என தெரியவில்லை.

2015 ஆம் ஆண்டு வெள்ளம்

2015 ஆம் ஆண்டு வெள்ளம்

யார் இந்த அமுதா ஐஏஎஸ் என்பதை பார்ப்போம். 2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின் போது வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார். அப்போது ஏராளமான பெண்கள், குழந்தைகள் , வயது முதியவர்களை வெள்ள நீரில் இருந்து சிறப்பாக செயல்பட்டு மீட்டார். அதிகாரியாக இருந்து மற்றவர்களை வேலை வாங்காமல் தானே களத்தில் இறங்கி வெள்ள நீரில் இறங்கி களப்பணியாற்றினார்.

அப்துல் கலாம்

அப்துல் கலாம்


இதையடுத்து ஜெயலலிதா, ஏபிஜே அப்துல் கலாம் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் இவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதா மறைந்த போது அவரது இறுதிச் சடங்கில் எந்த வித பிரச்சினையும் இன்றி செய்து முடித்தார். அதிலும் கருணாநிதியின் இறுதி சடங்கு பணிகளும் இவரிடமே ஒப்படைக்கப்பட்டது.

மெரினா

மெரினா

கருணாநிதிக்கு இறுதிச் சடங்கு செய்ய அறிஞர் அண்ணா சமாதிக்கு அருகே மெரினாவில் ஒரு இடம் ஒதுக்குமாறு திமுக சார்பில் அப்போதைய அதிமுக அரசிடம் கோரப்பட்டது. அதற்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க ஒப்புக் கொண்டது.

மெரினா

மெரினா

எனவே கருணாநிதிக்கு இறுதிச் சடங்கு மெரினா கடற்கரையில்தான் நடக்க போகிறது என்பது வெறும் 5 மணி நேரத்திற்கு முன்புதான் அமுதா ஐஏஎஸ்ஸிடம் சொல்லப்பட்டது. மிகவும் பதற்றமான சூழலில் லட்சக்கணக்கானோர் மெரினாவில் குவிந்த நிலையில் வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு அங்கும் இங்கும் துறுதுறுவென ஓடியாடி பணியாற்றிவர் அமுதா. அது போல் தான் ஐஏஎஸ் அதிகாரி என்பதையும் மறந்து கருணாநிதிக்கு நல்லடக்கம் அவரது குடும்பத்தினர் மணலை எடுத்து போட்ட போது அமுதாவும் ஓடி போய் மணலை எடுத்து போட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கருணாநிதி இறுதிச் சடங்கில் சிறப்பாக செயல்பட்ட மற்றொரு அதிகாரியான அனு ஜார்ஜ் ஐஏஎஸ் தற்போது முதல்வரின் தனிச் செயலாளரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+