அமித்ஷாவுக்கு டப்பிங் கொடுக்க வெக்கமா இல்லையா.. எடப்பாடியை வெளுத்து வாங்கிய சிதம்பரம்
கோவை: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் நடைபெறுகிறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மறுபக்கம் மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தம் கொண்டு வரவுள்ளது. இதற்கு காங்கிரஸ் திமுக உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டை சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தொகுதி மறுவரைறைக்காக நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்க்கிறோம். நான் இன்னும் வரைவு சட்டத்தை பார்க்கவில்லை. திமுக நியாயமான மறுசீரமைப்பு கோஷத்தை முன்வைத்தார்கள்.

தொகுதி மறுவரையறை
மக்களவை எண்ணிக்கையை அதிகரித்து பின் மறு சீரமைப்பு என சொல்வது மாயை. நாடாளுமன்றத்தில் 50 சதவீத எண்ணிக்கையை உயர்த்திவிட்டு செய்வது என்பது மாயை. 50 சதவீதம் உயர்த்தும் போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் 58 தொகுதிகளாக உயரும். உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகள் 120 தொகுதியாக மாறும். தொகுதி மறுவரையறை தொடர்பாக ஏப்ரல் 29 ஆம் தேதி கூட்டத்தை கூட்டலாமே. ஏன் இவ்வளவு அவசரமாக கூட்டுகின்றனர்.
நாடாளுமன்ற கூட்டத்தை 13 நாட்கள் கடந்து போடுவதால் என்ன பிரச்சனை. மேற்குவங்கம், தமிழகத்தை சேர்ந்த 67 எம்பிகள் இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என நினைக்கின்றனர்.
எடப்பாடி மீது காட்டம்
காங்கிரஸ் திமுக, தோழமை கட்சிகளை சேர்ந்த 39 பேரும் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். சட்டமன்ற தேர்தலில் கடைசி 5 நாட்கள் தேர்தல் வேலை தீவிரமாக நடக்கும். இந்த நேரத்தில் பிரச்சாரத்தை முடக்கவே நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர். இது திட்டமிட்ட சதி. 67 உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத நாடாளுமன்றத்தை கூட்டுவதன் அவசியம் என்ன.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த தொகுதி வரையறையால் பாதகம் ஏற்படும் அல்லது பாதகம் ஏற்படாது என்று சொல்ல வேண்டும் , ஆனால் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து அமித்ஷாவை கேட்டேன். அவர் பாதகம் வராது என்று சொன்னார். அதனால் பாதகம் வராது என்று கூறுகிறார்.
ராகுல் பிரச்சாரம்
அமித்ஷாவின் பதிலை ரிலே செய்வதற்கு இவர் அவரின் ஒலிபெருக்கியா. இது ஒரு கட்சி தலைவருக்கு அழகா. தொகுதி மறுவறையறை என்பது ஏமாற்று வித்தை. இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சொன்ன கணக்கில் என்ன பிழை என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்ல வேண்டும். பா.ஜ.கவினர் சூழலுக்கு ஏற்ப நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வார்கள்.
எடப்பாடி பழனிசாமி ஆசை நிராசை ஆகப்போகிறது. அவர் முதலமைச்சராக முடியாது. தமிழக மக்கள் என் ஏமாளிகளா. நாடாளுமன்றத்தில் முழு பலம் இருந்தால் இந்த அரசியல் திருத்த மசோதா தோற்கடிக்கபடும் . ராகுல் காந்தி தமிழகத்தில் இரண்டு நாள்கள் பிரச்சாரம் செய்யவுள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications