ஞாபக மறதி கொண்ட முட்டாள்கள் கூட்டத்தில் நம்மை சேர்த்துவிட்டாரா மோடி- ப.சிதம்பரம் காட்டம்
சென்னை: 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என கூறிக் கொண்ட மோடி, தற்போது தனக்கு சாதியே இல்லை என்கிறார் என்று ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது எனக்கு சாதி அரசியலின் மீது துளியும் நம்பிக்கை கிடையாது என குறிப்பிட்டிருந்தார்.
இதை சுட்டிக் காட்டிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதை முன்னிலைப்படுத்தி கடந்த மக்களவை தேர்தலில் மோடி பிரசாரம் செய்தார். சாதியை தன்னுடனே வைத்துக் கொண்டு பிரசாரம் செய்த முதல் பிரதமர் மோடிதான்.
Mr Narendra Modi is the first person who became PM later who campaigned wearing his caste on his sleeve (2014): "I am an OBC".
— P. Chidambaram (@PChidambaram_IN) April 28, 2019
Now, he says he has no caste!
பின்னர் ஆட்சியை பிடித்தார். தற்போது மோடியோ தனக்கு சாதியே கிடையாது என்கிறார். பதவியேற்ற பிறகு, டீ விற்றவனான தன்னை இந்த நாட்டின் பிரதமராக மக்கள் தேர்ந்தெடுத்ததை எண்ணி பெருமைப்படுவதாக பலமுறை கூறிய மோடி, தற்போது நான் டீ விற்றவன் என்று ஒருபோதும் கூறியதில்லை என்கிறார்.
In 2014 and thereafter, he said repeatedly that he is proud that the people elected a chaiwala as PM.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 28, 2019
Now he says, he never mentioned his origins as a chaiwala!
What does the PM take us for? A bunch of idiots who have large memory losses?
நம்மை பற்றி பிரதமர் என்னவென்று நினைக்கிறார்? ஞாபக மறதி கொண்ட சிறிய முட்டாள்கள் கூட்டத்தில் நம்மையும் அவர் சேர்த்து விட்டாரா?' என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications