அரசு சட்ட கல்லூரி, வேளாண் கல்லூரி.. முதல்வர் ஸ்டாலினிடம் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகங்கையில் அரசு சட்ட கல்லூரி மற்றும் கானாடுகாத்தானில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பல்வேறு செயல்பாடுகளை ப. சிதம்பரம் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.

P Chidambaram meets CM MK Stalin

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ப.சிதம்பரம், உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்தது சிறந்த நடவடிக்கை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ப. சிதம்பரம் நேரில் சந்தித்தார்.

அவருடன் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரமும் சென்றிருந்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் தமது ட்விடர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

P Chidambaram meets CM MK Stalin

முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் @PChidambaram_IN MP சிவகங்கை MP @KartiPC தமிழ்நாடு@CMOTamilnadu @mkstalin அவர்களை சந்தித்து சிவகங்கையில் அரசு சட்டக் கல்லூரியும், கானாடுகாத்தானில் வேளாண்மைக்கல்லூரியும் அமைக்க கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலனை செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்.

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+