ஹைட்ரோ கார்பன் திட்டம்: எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பி.ஆர்.பாண்டியன்
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் சந்தித்தார்.
திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் கிணறுகள் உள்ளன. அதில் கடந்த 2013 ஆம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் கடுமையாக எதிர்த்ததால் அந்த கிணறு மூடப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு திரும்பவும் அந்த கிணற்றிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி ஆயத்தமானது. அப்பகுதி மக்களின் கடும் போராட்டத்தால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதி வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய எண்ணெய் கிணறுகளைத் தோண்டுவதற்கு ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு தமிழகத்தில் அனுமதி தரப்படவில்லை. அதனால் பழைய கிணறுகளில் இருந்து மீண்டும் எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அந்த நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெரியகுடியிலுள்ள பழைய கிணற்றிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி திட்டமிட்டது. அதற்காக ஒப்புதல் வேண்டி தமிழக அரசு அணுகிய நிலையில் அந்த கிணற்றைப் பயன்படுத்துவது குறித்த மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிராக வரும் 15-ஆம் தேதி நடத்தவுள்ள உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பி.ஆர்.பாண்டியன் அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications