ஆளுநர் செய்தது தவறு.. இது தமிழ்நாடு மக்களுக்கு எதிரான முடிவு.. இயக்குனர் பா.ரஞ்சித் கடும் விமர்சனம்!
சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை இயக்குனர் பா. ரஞ்சித் விமர்சனம்
செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றியது. இதையடுத்து மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி இருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா ஆளுநர் மூலம் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது என தமிழ்நாடு அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளுநர் முடிவு
தமிழ்நாடு சிறப்பு சட்ட மன்ற கூட்டத்தொடர் வரும் 8ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மீண்டும் இதே மசோதா நிறைவேற்றப்படும். பின்னர் அந்த மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்படும். இந்த முறை சட்டப்படி ஆளுநர் இந்த மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ஆளுநரின் இந்த முடிவிற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இயக்குனர் பா. ரஞ்சித் ஆளுநரின் இந்த முடிவை விமர்சனம் செய்துள்ளார்.

பா. ரஞ்சித்
சென்னையில் "இளைஞர்கள் பார்வையில் வடசென்னை" என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் வடசென்னையில் இளைஞர்கள் எடுத்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த கண்காட்சி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில் நேற்று இயக்குனர் பா. ரஞ்சித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பா. ரஞ்சித் ஆளுநர் குறித்தும், நீட் விலக்கு மசோதா பற்றியும் பேசினார்.

பா. ரஞ்சித் ஆளுநர்
அதில், நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து இருக்க வேண்டும். அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது மிகவும் தவறானது. ஆளுநரின் செயல்பாடு சரியில்லை. இது தமிழ்நாடு மக்களின் உணர்வு. அதை திருப்பி அனுப்புவது என்பது ஏற்புடையது அல்ல. அவரின் முடிவு முழுக்க முழுக்க தமிழ்நாடு மக்களுக்கு எதிரான முடிவு என்று இயக்குனர் பா. ரஞ்சித் துணிச்சலாக குறிப்பிட்டார்.
Recommended Video

பா. ரஞ்சித் நீட்
அதோடு வடசென்னை என்பதை மக்கள் அழுக்காக காட்டி இருக்கிறார்கள். இல்லையென்றால் அதிக மக்கள் தொகை வசிக்கும் நெருக்கடியான பகுதியாக காட்டி இருக்கிறார்கள். ஆனால் வடசென்னையின் உண்மையான அழகை இந்த புகைப்பட கண்காட்சியில்தான் காட்டி உள்ளனர். வடசென்னை மக்களிடம் இருக்கும் அழகியல், அரசியலை இந்த புகைப்பட கண்காட்சியில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர் என்றும் பா. ரஞ்சித் குறிப்பிட்டார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications