மணிப்பூர் கொடூரம்.. பொங்கிய பா.ரஞ்சித், கொதித்த பிரியா பவானி சங்கர், ராஷ்மிகா! திரையுலகிலும் அதிர்வு
சென்னை: மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கும்பலாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதுகுறித்து பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், “மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக பாஜக தலைமையிலான அரசுகள் மௌனம் காப்பதை கண்டிக்கிறேன். சமூக - பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தும் மெய்தி இந்துக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, குகி-சோ கிறிஸ்தவ பழங்குடியினருக்கும் மெய்தி இனத்தவர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது.

மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்ட நிலையில், இரண்டு மாதங்களாகத் கலவரங்கள் தொடர்கின்றன. குகி - சோ பழங்குடியினரின் தேவாலயங்களையும் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் எரிப்பதன் மூலம் தாக்குதல்கள் வகுப்புவாத வடிவத்தை எடுத்து இருக்கின்றன.
பாஜக தலைமையிலான மத்திய மாநில அரசுகள் மற்றும் அதன் அமைப்புக்கள் இந்தப் பிரச்சினையை அலட்சியப்படுத்தி உள்ளன. இந்த மௌனமும், உணர்வின்மையும் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத வெட்கக்கேடான செயல். வன்முறையில் உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் ராஜினாமா செய்யவுய்ம் நாங்கள் வலியுறுத்துகிறோம். மணிப்பூர் மக்களுக்கு எனது ஆதரவு.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து பிரபல தமிழ் திரைப்பட நடிகை பிரியா பவானி சங்கர் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, “மணிப்பூர் பெண்கள் - இந்த சமூகம், இனம், மனிதநேயம் என அனைத்தும் பல்வேறு நிலைகளில் தோல்வி அடைந்து உள்ளன. மனிதர்களாகிய நாம் இந்த செயலை நேர்மையுடன் கண்டிக்க வேண்டும். இத்தகைய பல்வேறு கொடூரங்களுக்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. பிரச்சனையில் உள்ள மக்களுக்கு ஊடகங்களை முடக்குவது உதவாது.” என்று தெரிவித்து உள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் ஸ்டோரியில், “இந்த உலகில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது. படித்ததை என்னால் நம்ப முடியவில்லை. அது என் மனதை குலைத்து உள்ளது. சொல்வதற்கே வருத்தமாக இருக்கிறது. நான் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் உளப்பூர்வமாக நிற்கிறேன். குற்றவாளிகளை தண்டிப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications