இதுதான் உங்கள் பண்பாடு.. திருமா பற்றிய காயத்ரி கருத்துக்கு பா.ரஞ்சித் காட்டமான பதிலடி!
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் வசவுகளையும், அவதூறுகளையும் செய்து கொண்டிருப்போரை வன்மையாக கண்டிக்கிறேன் என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் வசவுகளையும், அவதூறுகளையும் செய்து கொண்டிருப்போரை வன்மையாக கண்டிக்கிறேன் என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாபர் மசூதி இடிப்பு குறித்து கருத்து தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் பேசிய அவர், அயோத்தி தீர்ப்பு குறித்தும், இந்து மத வழிபாடு குறித்தும், ஜாதி கொடுமைகள் குறித்தும் பேசினார்.
அவரின் இந்த பேச்சு பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மற்றும் கட்சிகளை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஆனால் இதற்கு பின் திருமாவளவன் தன்னுடைய விளக்கத்தை கொடுத்தார்.

என்ன விளக்கம்
அதில், எனது பேச்சில் ஒரு சில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது என்று சிலர் என்னிடம் கூறினர். அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும் அதற்காக நான் வருந்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

கடுமையான வார்த்தை
இந்த நிலையில் பாஜகவின் ஆதரவாளர் காயத்ரி ரகுராம் கடுமையான வார்த்தைகளில் திருமாவளவனை விமர்சித்தார். திருமாவளவன் கருத்துக்கு காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்தார். அதோடு, இந்து மதத்தை விமர்சித்த திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் என்று பதிவிட்டிருந்தார். மேலும் பாமகவினர் உதவியையும் கேட்டு இருந்தார்.
|
பதிலடி
இந்த நிலையில் காயத்ரி ரகுராமின் கருத்துக்கு தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் பதில் அளித்துள்ளார். அதில், ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனித தாக்குதல்கள் & அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது. அண்ணன் திருமா அவர்களை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை! என்று கூறியுள்ளார்.
|
ஷேர்
மேலும் பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் டிவிட்டை ஷேர் செய்துள்ளார். அதில், உலகில் கொடூரமானவர்களை வரிசைப்படுத்தினால் இந்துக்களை முன்னே நிறுத்தலாம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். "இந்துக்கள்" என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்ற போதிலும், சாதிகளைக் கொண்ட அதன் திரட்சி நாளுக்கு நாள் மூர்க்கமாகி வருகிறது
|
கண்டிப்பு
முனைவர். திருமா அவர்களின் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் வசவுகளையும், அவதூறுகளையும் செய்து கொண்டிருப்போரை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாக கண்டிக்கிறது, என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications