NDA கூட்டணியில் அதிமுக இருந்திருந்தால் 100% வெற்றி சாத்தியம்! அடித்துச் சொல்கிறார் பாரிவேந்தர்
சென்னை: பாஜக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றிருந்தால் இந்தத் தேர்தலில் அமோக வெற்றியை மிக எளிமையாக அடைந்திருப்போம் என்று பாரிவேந்தர் கூறியுள்ளார்.
கடைசி நேரம் வரை பாஜக கூட்டணியில் அதிமுக இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக வந்த பாஜக தேசிய மேலிடத் தலைவர்கள் கூட, "கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளது" என்று பேசிவந்தனர்.

அதற்கும் ஒருபடி மேலே சென்று மாநிலத் தலைவர் அண்ணாமலை, "கூட்டணி கதவு மட்டும் அல்ல, ஜன்னல்கள் கூட திறந்தே உள்ளது" என்றார்.
ஆனால், அதிமுக தலைமை அண்ணாமலையின் அழைப்பைப் பொருட்படுத்தவே இல்லை. கூடுதலாக அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் அண்ணாமலையை மிக மோசமாக விமர்சிக்கத் தொடங்கினார்.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, வேலுமணி, கோகுல இந்திரா என்று பலர் அண்ணாமலையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வந்தனர்.
இரண்டு தரப்பு மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு, வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். ஆகவே, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி என்பது கைகூடாமலே போய்விட்டது.
இந்நிலையில் அதிமுக மட்டும் பாஜக கூட்டணியில் இடம்பிடித்திருந்தால், இந்தத் தேர்தலில் நாங்கள் எளிமையாக வெற்றி பெற்றிருப்போம். அதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.
அதிமுக இல்லாத கூட்டணி:
இது குறித்து ஒன் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ள அவர், "அதிமுக மட்டும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தால் 100% வெற்றி உறுதி. அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிமுக கூட்டணி பாஜகவில் இடம்பெறாமல் போனது ஒரு துரதிருஷ்டம்தான். அண்ணாமலையின் பேச்சு அதிமுக தரப்புக்குப் பிடிக்காமல் போய்விட்டது.
2026இல் யார் முதல்வர்? என்பதில் இரண்டு கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு வந்துவிட்டது. இந்த நிகழ்வுகள் எல்லாம் நடைபெறாமல் இருந்து பாஜக கூட்டணியில் அதிமுக இருந்திருந்தால் மிகச் சுலபமாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்போம். அதில் ஒருவித சந்தேகமும் இல்லை.
இது நாடாளுமன்றத் தேர்தல். தமிழ்நாட்டிலிருந்து ஒரு எம்பிகூட பாஜகவுக்குக் கிடைக்கவில்லை என்றாலும் மோடிதான் அடுத்த பிரதமர். அதில் ஒருவித சந்தேகமும் இல்லை. இப்போது 303 சீட்டுகளைப் பாஜக வைத்துள்ளது.
இந்த முறை பாஜக இந்த எண்ணிக்கையைவிட அதிக இடங்களைப் பிடிப்பது உறுதி. ஒருவேளை தமிழ்நாட்டில் பிடிக்கவில்லை என்றாலும் வடநாட்டில் பெரிய வெற்றியை மோடி பெறுவார்.
'இந்தியா' கூட்டணி பிரிந்துபோய் உள்ளது. ஒரு ஒருங்கிணைப்பு இல்லை. அவர்கள் சேர்ந்துள்ளதைப்போல் ஒரு தோற்றத்தை உண்டாக்கி வைத்துள்ளனர். கடந்த முறையே காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.
இந்த முறை அதைவிட மோசமான பின்னடைவைக் காங்கிரஸ் கட்சி சந்திக்கும் என்பது என் கணிப்பு.
ஆகவே, மக்கள் இதை உணர்ந்து பாஜக கூட்டணியைத் தமிழ்நாட்டில் ஆதரிக்க வேண்டும். அப்படி ஆதரித்தால் ஆளும் கட்சியான பாஜகவிடம் பல திட்டங்களைக் கேட்டுப் பெறமுடியும். தமிழ்நாடு பயனடையும். அதுதான் எனது திட்டம். ஆகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளேன்.
அண்ணாமலை பிறவியிலேயே அறிவாளி:
வயதில் இளையவர் அண்ணாமலை. அவரது தலைமையில் இப்போது பாஜக கூட்டணி அமைந்துள்ளது. அதில், பாமக, ஐஜேகே, தமாகா போன்ற கட்சிகள் உள்ளனர். மூத்த தலைவர்களான உங்களால் அண்ணாமலையைத் தலைவராக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எப்படி வந்தது.
"அண்ணாமலை பிறவியிலேயே அறிவாளி. நான் ஒரு கல்வியாளர். எனக்கு ஒருவரிடம் உள்ள திறமையை உடனடியாக அடையாளம் காணக்கூடிய அறிவு உள்ளது. உண்மையிலேயே அண்ணாமலை சிறந்த அறிவாளி.
நான் அடிக்கடி சொல்வதுண்டு, அவர் ஒரு பிரதமர் பதவிக்குத் தகுதியுள்ள தலைவர் என்று. அது உண்மை. விரைவில் அதை மக்கள் உணர்வார்கள். அவர், சரியான நேரத்தில் சரியான தருணத்தில் பாஜகவுக்குக் கிடைத்துள்ளார். அதுவே உண்மை" என்றவரிடம் பாமக உடனான கருத்து முரண்பாடுகள் இப்போது சரியாகி விட்டதா? என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பாரிவேந்தர், "பாமகவுடன் எனக்கு சில விமர்சனங்கள் இருந்தன. நான் அவர்களை விமர்சனம் செய்துள்ளேன். நான் பாஜக கூட்டணியில் உள்ளேன். பாஜகவுடன் அவர்கள் வரும்போது நான் அதற்கு எதிர்ப்பு சொல்ல முடியாது. அதுதான் கூட்டணியின் இயற்கை. தர்மம்.
அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை விமர்சித்தார்கள். ஆகவே அதற்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை வந்தது. மற்றபடித் தனிப்பட்ட வகையில் எனக்கு அவர்களுடன் எந்தப் பகையும் இல்லை" என்கிறார்.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே












Click it and Unblock the Notifications