திமுக ஆட்சிக்கு ‘சைபர்’ மார்க் போட்ட பாரிவேந்தர்! என்ன காரணம்?
சென்னை: திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சிக்கு 'முட்டை' மார்க்தான் போட முடியும் என்று பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாரிவேந்தர். இந்த முறை பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

கள நிலவரப் படி பாரிவேந்தருக்கு தொகுதியில் அதிக ஆதரவு உள்ளது. அதிமுக, திமுக என்ற பெரிய கட்சிகளைத் தாண்டிய செல்வாக்கை அவர் பெற்றுள்ளார். அதற்குக் காரணம், இந்தத் தொகுதியில் அவரது சமுதாய மக்கள் குறைந்தது 3 லட்சம் பேர் உள்ளனர்.
ஆகவே அவர் தனியாகப் போட்டியிட்டால் கூட 2 லட்சம் வாக்குகளை மிகச் சாதாரணமாகப் பெற்றுவிடுவார் என அரசியல் வியூகர்கள் கூறி வருகின்றனர். அது உண்மையும் கூட. ஏனென்றால் 2014இல் பாஜக கூட்டணியில் இவர் 2லட்சத்து 40 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார்.
அன்றைக்கு ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய தலைவர்கள் உயிருடன் இருந்தனர். அப்போதே அவர் பாஜக கூட்டணியில் இவ்வளவு வாக்குகளைப் பெற்றது பெரிய விசயம்.
கடந்த 2 தேர்தல்களைவிட, இந்தத் தேர்தலில் பாரிவேந்தர் அதிக ஆக்டிவ் ஆக இருக்கிறார். பல்வேறு ஊடகங்களில் தனது கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்து வருகிறார்.
அவர் ஒன் இந்தியா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "நான் ஒரு கல்வியாளர். அதுதான் என் முதன்மையான அடையாளம். நான் ஒருநாள் கூட எம்பி என்ற பதவியை எனது சொந்த தேவைக்காகப் பயன்படுத்திக் கொண்டது இல்லை.

எனக்குப் பணம் தேவையில்லை. எங்கள் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அதன் மூலம் எத்தனையோ நல்ல காரியங்களைச் செய்து வருகிறோம். சில தினங்கள் முன்பாகக் கூட ஒருவர் சிகிச்சைக்குக் கட்டணம் செலுத்த முடியவில்லை என்று வந்து நின்றார்.
மொத்தம் 5 லட்சம். அவர் 2 லட்சம் கட்டி உள்ளார். என்னால் அதற்கு மேல் முடியவில்லை என்று கண்கலங்கினார். என்ன செய்வது. நான் நிர்வாகத்தினரை அழைத்து, அவரிடம் பணம் கேட்க வேண்டாம். நாமே உதவலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.
இப்படி எத்தனையோ நல்ல காரியங்களை நாங்கள் வெளியே தெரியாமல் செய்து வருகிறோம். எதுவும் அரசியல் லாபத்திற்காக அல்ல.
இங்கே உள்ள வழக்கமான அரசியல்வாதிகளைப் போல இல்லை நாங்கள். கட்சியின் மூலம் பல நல்ல திட்டங்களைத் தமிழ்நாட்டுக்குத் தரலாமே என முயற்சி செய்துள்ளேன்.

அதனால் தான் 50 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட ரயில் திட்டத்திற்கு மீண்டு உயிர் கொடுத்துள்ளேன். அதற்காக எத்தனை முறை பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுத்தேன் என்பது எனக்குத்தான் தெரியும்.
ரயில்வே அமைச்சர், நிதியமைச்சர் என்று நடையாய் நடந்தேன். அது மட்டும் நிறைவேறி விட்டால் அது என் வாழ்நாள் சாதனை. இந்தப் பெரம்பலூர் மக்கள் காலங்காலத்திற்கும் பயனடைவார்கள். அப்படியான ஒரு திட்டம்.
ஆகவே அரசியல் என்பது பலருக்கு ஊழல் செய்யப் பயன்படும் தொழிலாக உள்ளது. எங்களுக்கு அப்படி அல்ல என்கிறார் பாரிவேந்தர்.
ஒன் இந்தியா தளத்திற்குப் பேட்டி அளித்து பாரிவேந்தர் பல விசயங்களை மனம் விட்டுப் பேசி உள்ளார்.
கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண் போடுவீர்கள் என்ற கேள்விக்கு அவர், "திமுக 3 ஆண்டுகால ஆட்சிக்கு ஜீரோவுக்கு கீழே ஏதாவது ஒரு மதிப்பெண் இருந்தால் அதைத்தான் கொடுப்பேன். ஏனென்றால், ஊழலுக்கு ஓர் எல்லையே இல்லாமல் வளர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது.
நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் கட்சி ஆரம்பிக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால், ஏதாவது பெரிய கட்சி ஒன்று சேர்ந்து பெரிய பதவியை வாங்கிக் கொண்டிருக்கலாம்.
அப்படியில்லை. எங்களை வாழவைத்த தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நல்ல திட்டங்களைச் செய்ய வேண்டும் என நினைத்தோம். அதற்காக அரசியலுக்கு வந்தோம்.
ஆனால், இங்கே அப்படி ஒரு சூழலே இல்லை. மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளை அடித்து அரசியல் செய்கிறார்கள். வரி யார் எல்லாம் கட்டுகிறார்கள். சாதாரணமாக உப்பு,புளி, மிளகாய் வாங்கும் உழைக்கும் மக்கள் தொடங்கி பணக்காரர் வரை வரிக் கட்டுகிறார்கள். நேரடியாக வரிக் கட்டுபவர்கள். மறைமுகமாக வரிக் கட்டுபவர் எனப் பல வகைகளில் வரி வசூலிக்கப்படுகிறது.
அந்த வரிப்பணத்தில் ஊழல் செய்கிறார்கள். மக்கள் என்றால் யார்? 40% மேல் உள்ளவர்கள். மீதம் உள்ள 60% அடித்தட்டு மக்கள். ஒருவேளை சாப்பாட்டுக்கு உத்தரவாதம் இல்லாத மக்கள்.
அவர்களின் வரிப்பணத்தில் ஊழல் செய்கிறார்கள். இந்தப் பணத்தில் ஊழல் செய்வது பாவச் செயல். அப்படி ஊழல் செய்வார்களுக்கு என்ன மதிப்பெண் போட முடியும் சொல்லுங்கள்" என்கிறார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications