3ஆவது முறையும் பெரம்பலூரில் போட்டி! காரணம் என்ன? பாரிவேந்தர் பளீச்
சென்னை: தமிழ்நாட்டில் தேசிய பார்வை வளராமல் போனதற்கு திமுகதான் காரணம் என்று பாரிவேந்தர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாகக் களம் இறங்கி உள்ளார். மீண்டும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

மேலும் தனது கட்சிக்கும் தனக்கும் ஒரு தேசிய பார்வை உள்ளது என்று அடிக்கடி சுட்டிக்காட்டிப் பேசி வருகிறார். அதற்காகத்தான் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தி வருகிறார்.
நாட்டின் வளர்ச்சி என்பது மோடிக்குப் பின்னர் வளர்ந்துள்ளதாகவும், உலக நாடுகள் உள்ள தலைவர்களின் வரிசையில் மோடி சக்தி வாய்ந்த தலைவராக உயர்ந்துள்ளார் என்றும் பாரிவேந்தர் கூறி வருகிறார்.
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் வளராமல் போனதற்கு என்ன காரணம் என்பது குறித்து பாரிவேந்தர் சில விளக்கங்களை முன்வைத்துள்ளார். அதேபோல் பெரம்பலூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிடுவதற்குக் காரணம் என்ன என்பது பற்றியும் அவர் பேசியுள்ளார்.
ஒன் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ள பாரிவேந்தர் இது குறித்துப் பேசுகையில், "நிறையச் சொல்லலாம். அது பெரிய கதை. திருச்சியில் எங்கள் நிர்வாகத்திற்கு ஒரு ஹோட்டல் உள்ளது. இங்கிருந்து 20 தூரத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைக் கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

திருச்சியில்தான் நான் கல்லூரி படித்தேன். ஜமால் முகம்மது கல்லூரி என் வாழ்வில் மறக்கவே முடியாது. எனது இளமைக்காலம் முழுக்க இங்குதான் கழித்தேன். திருச்சி பக்கத்தில்தான் பெரம்பலூர் உள்ளது. அங்கே எனது சமுக மக்கள் அதிகம் உள்ளனர்.
கிட்டத்தட்ட 2.5 லட்சம் மக்கள் உள்ளனர். எங்கள் கட்சியைத் தொடங்கியது முதல் பெரம்பலூரில் நல்ல செல்வாக்குடன் உள்ளோம். தனித்து நின்றாலும் கூட்டணியில் நின்றாலும் எங்கள் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள பகுதிகளில் முதல் இடத்தில் பெரம்பலூர் உள்ளது.
2014 பாஜக கூட்டணியில் நின்றேன். அப்போதே 2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகளைப் பெற்றேன். அன்று பாஜக இந்தளவுக்கு வளரவில்லை. திமுகவுக்கு எங்களுக்கு 8 ஆயிரம் வாக்குகள்தான் வித்தியாசம்.
அந்தளவுக்கு எங்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்த தொகுதி பெரம்பலூர். இந்த 2024 தேர்தல் கூட ஏறக்குறையை 2014 தேர்தலுடன் ஒத்துப் போகிறது. அன்று பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை. இப்போதும் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை.
இன்று பாஜக தமிழ்நாட்டில் பல மடங்கு வளர்ந்துள்ளது. 2014இல் மோடி தமிழ்நாட்டில் இவ்வளவு பிரபலம் கிடையாது. இன்று அவர் 10 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்துள்ளார். மூலை முடுக்குகளில் உள்ள யாரைக் கேட்டாலும் மோடியைத் தெரியும். அந்தளவுக்குப் பிரபலமாகி உள்ளார்.
ஆகவே, முன்பை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். மக்கள் ஆதரவு எனக்கு அதிகம் உள்ளது. மக்கள் யாரும் என்னை ஒரு அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை. ஒரு கல்வியாளர் என்று பார்க்கிறார்கள். நான் அவர்களுக்கு உதவுவேன் என்று நம்புகிறார்கள். ஆகவே, என் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது.
நான் அரசியலை வைத்து பணம் சம்பாதிக்க வரவில்லை. மக்களுக்கு நேரடியாக உதவ அரசியல் களம் பயன்படும் என்பதற்காக வந்துள்ளேன். அதை மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள்" என்கிறார்

பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாரிவேந்தர் தொடர்ந்து தனக்கு ஒரு தேசிய பார்வை உள்ளது என்று சொல்லி வருகிறார். அப்படி என்றால் தமிழ்நாட்டில் தேசிய பார்வை வளராமல் போனதற்கு யார் காரணம் என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு பாரிவேந்தர், "இது ஒரு நல்ல கேள்வி. 1967க்கு முன்பு வரை தமிழ்நாட்டைத் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிதான் ஆண்டது. அதன் பின்னர் அண்ணா ஆட்சியமைத்தார். திமுகவைத் தொடர்ந்து திராவிட கட்சிகள் ஆண்டு வருகின்றன.
அண்ணா குறைந்த காலத்திலேயே மறைந்துவிட்டார். அது தமிழ்நாட்டின் துரதிருஷ்டம். அதன்பின்னர் வந்தவர்கள் கட்சியை வளர்ப்பதைவிட, தன்னையும் குடும்பத்தையும் வளர்ப்பவராக மாறிவிட்டார்கள். அவர்களால் நாட்டுக்கு நல்லது நடக்கவில்லை. அவர்களின் வீட்டுக்கு நல்லதுதான் நடந்துள்ளன.
அதன் பின்னால், வந்த ஆட்சியர்கள் இந்தியா என்றால் ஒரு வெறுப்புணர்ச்சியை கடைப்பிடித்து வந்தார்கள். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்றே பேசி வந்தார்கள். இன்று தமிழ்நாடுதான் வளர்ந்துள்ளது. வடநாடு தேய்ந்துள்ளது. ஆகவே, இவை எல்லாம் பொருந்தாத வாதங்கள்.
சமூகநீதி, மாநில உரிமை என்று பேசிப் பேசி தேசிய பார்வையை வளரவிடாமல் செய்துவிட்டார்கள். இப்படிப் பேசி மக்களை பிளவுபடுத்தி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டு பெரிய அளவில் ஊழல்களைச் செய்து சொத்து சேர்த்துவிட்டார்கள்.
நான் கூட 40 ஆண்டுகளுக்கு முன்னால் இவர்களின் அடுக்கு மொழி பேச்சைக் கேட்டு மயங்கி ஓட்டுப் போட்டுள்ளேன். என்னைப் போல் பலரும் இருந்தார்கள். நேரு இருந்தவரைக் காங்கிரஸ் ஆட்சி பரவாயில்லை.
அவர் ஐந்தாண்டு திட்டங்களை எல்லாம் அறிமுகப்படுத்தினார். தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு முன்னேற்றினார். அதன்பின்னர் காங்கிரஸ் குடும்பக் கட்சியாகிவிட்டது.
டெல்லியில் நேருவைப் போலத் தமிழ்நாட்டில் அண்ணாவுக்குப் பின் வந்தவர்கள் தங்களின் குடும்பம், பிள்ளை, பேரப்பிள்ளை என்று கட்சியைக் கொண்டு சென்று விட்டார்கள். புதியவர்கள் யாரும் அரசியலில் வெற்றி பெறமுடியவில்லை.
ஆட்சியைத் தக்க வைப்பதற்குப் பணம் தேவை. அதற்காக ஊழல் செய்வது. அந்தப் பணத்தைக் கொண்டு மீண்டு ஆட்சிக்கு வருவது. இப்படி அரசியலைக் கெடுத்தவர் கலைஞர்தான். அவரது குடும்பத்தை வளர்ப்பதற்காக அரசியலை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
தமிழ்நாட்டில் சாராயத்தைக் கொண்டு வந்ததும் அவர்தான். இப்படித் தொடர்ந்து ஊழல் என்பது பெருகிவிட்டது. அரசியலுக்கு வர வேண்டும் என்றால், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் பல லட்சங்களைச் செலவழிக்க வேண்டி உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.
இன்று தமிழ்நாட்டில் பழைய நிலை இல்லை. மக்கள் இவர்களின் அடுக்கு மொழிகளை நம்புவதாக இல்லை. பல விஷயங்களைப் புரிந்துகொண்டு வளர ஆரம்பித்து விட்டார்கள். இப்போது தேசிய பார்வை தமிழ்நாட்டில் தழைக்க ஆரம்பித்துள்ளது" என்றார்
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications