ரூட் தல மோதல்.. அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்.. பரபரப்பு வீடியோ வெளியானதால் மக்கள் ஷாக்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதலில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்
Recommended Video
சென்னை: ரவுடிகளை போல வெட்டிக் கொண்ட மாணவர்களை பார்த்து சென்னைவாசிகள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சிசிடிவி காட்சியாகவும் வைரலாகி வருகிறது.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மாணவர்களிடையே அடிக்கடி மோதல் வலுத்து வருகிறது. ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது போய், கத்திக்குத்து, அரிவாள் வெட்டு அளவுக்கு இந்த கல்லூரிக்குள் வன்முறை புகுந்துவிட்டது.
இந்நிலையில், இரு தரப்பு மாணவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்த நிலையில், அது இன்று மோதலாக வெடித்தது.

மோதல்
இந்த மோதலுக்கு ரூட் தல பிரச்சனைதான் என்று கூறப்படுகிறது. இன்று வழக்கம்போல் கல்லூரி முடிந்து ஒரே பஸ்ஸில் மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போதுதான் ரூட் தல விவகாரம் கிளம்பி உள்ளது.
அப்போது இரு தரப்புமே சரமாரியாக மோதிக் கொண்டனர்.

நடுரோடு
பிறகு திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து தாக்கி கொண்டனர். பஸ்ஸில் இருந்து இறங்கி நடுரோட்டில் ஓடிய மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள் விரட்டி விரட்டி வெட்டி உள்ளனர். இதில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது.

மாணவர்கள்
ரவுடிகள் போல மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டதை பார்த்து மற்ற பஸ்ஸில் இருந்த பயணிகள், பொதுமக்கள், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் என எல்லாருமே அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

ஆயுதங்கள்
பொதுமக்களில் ஒரு சிலர் இதை செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்திலும் போட்டுவிட, அதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், ஒரு சிலரே பிடிபட்ட நிலையில், பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தப்பி விட்டனர்.

பரபரப்பு
எனினும் வீடியோ மற்றும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த 7 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் வசந்த் என்ற மாணவருக்கு பலத்த காயம் என்று கூறப்படுகிறது. அதனால் அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடுரோட்டில் நடந்த இந்த பகீர் சம்பவத்தினால் 30 நிமிடம் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications