"நீ எஸ்சியாடா.. உன் மூஞ்சிய பார்த்தாலே தெரிதே.." சாதி பேசிய பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்
சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நீதியரசர் ராஜுவின் அனுமதியுடன் கல்லூரி செயலாளர் துரைக்கண்ணு பிறப்பித்துள்ளார்.
சென்னை சேத்துபட்டில் உள்ளது பச்சையப்பன் கல்லூரி. இது பழமைவாய்ந்த கல்லூரியாகும். இங்கு தமிழ் பேராசிரியையாக இருப்பவர் அனுராதா. இவர் தனது துறை மாணவர்களிடம் தொலைபேசியில் பேசிய உரையாடல் ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த ஆடியோவில் பேசிய அனுராதா, காலேஜுக்கு வரும் மாணவர்களின் முகத்தை பார்த்தாலே பிசியா, எம்பிசியா அல்லது எஸ்சியா என்பது தெரிந்துவிடும்.

கம்யூனிட்டி
நீ என்ன கம்யூனிட்டி என்றே எனக்கு தெரியாது. ஆனால் மூஞ்சியை பார்த்தால் சொல்லிவிடுவேன். ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த மாணவர்களால்தான் பிரச்சினையே வருகிறது. அந்த மாணவர்கள் நமக்கு தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறார்கள் என கூறிய அனுராதா ஒரு மாணவரின் பெயரை கூறி நீ என்ன கம்யூனிட்டி கண்ணு என கேட்கிறார்.

மூஞ்சிய பார்த்தாலே தெரியுதே
அதற்கு அந்த மாணவன் எம்பிசி மேடம் என கூற ஆம் உன் மூஞ்சியை பார்த்தாலே தெரிகிறது என கூறி தமிழ் துறையில் உள்ள சில மாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுடைய ஜாதி என்ன என கேட்கிறார். அப்போது ஒரு மாணவன் எஸ்சி என சொல்ல, ஐயோ என வெறுப்பை காட்டுவது போல் அவரது ஆடியோ உரை உள்ளது.

கண்டனங்கள்
மாணவர்களின் பெயரை சொல்லி அவர்களின் சாதியை கேட்டு பாகுபாட்டை விதைக்கும் வகையில் அவர் பேசியதற்கு கண்டனங்கள் எழுந்தன. அதிலும் சமத்துவத்தை போதிக்க வேண்டிய ஒரு ஆசிரியரே இப்படி சாதி வெறியுடன் இருக்கிறாரே என சமூகவலைதளங்களில் விவாதங்கள் ஏற்பட்டன.

அனுராதா சஸ்பெண்ட்
இந்த நிலையில் இந்த கல்லூரி நீதியரசர் ராஜுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால் அவரது அனுமதியுடன் அனுராதாவை இடைநீக்கம் செய்து கல்லூரி செயலாளர் துரைக்கண்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார். அனுராதா ஏற்கெனவே ஒரு முறை சாதிய ரீதியில் பேசியதால்தான் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டதாகவும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தடை பெற்றால் அவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலேயே தனது பணியை தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications