Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படையப்பா நீலாம்பரியை பார்த்ததும் கொதித்த "ஜெயா"! ரிலீஸாக விடாமல் தடுத்தாரா? 1999-ல் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் பிறந்தநாளுக்காக "படையப்பா" நேற்றைய தினம் ரீரிலிஸ் செய்யப்பட்ட நிலையில் அப்போது தணிக்கை குழுவில் இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகளை விவரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "எனக்குத் தெரிய 1999 ஆம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு அன்று படையப்பா திரைப்படம் வெளிவந்தது. ஏறக்குறைய 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தப் படத்தைத் தணிக்கை செய்தது அன்றைய சென்சார் போர்டில் பங்குபெற்ற என் உள்ளிட்ட நான்கு பேர்கள். அப்படம் தணிக்கைக்கு வந்த போது பல்வேறு எதிர்ப்புகள் இருந்தன. எங்கள் நால்ருக்குள்ளும் முரண்பாடுகள் இருந்தது.

padayappa rajinikanth

அக் கமிட்டியில் இருந்த ஜெயா அருணாச்சலம் தமிழகமறிந்த முக்கியமான பெண்மணி. ஜமுனா லால் விருதைப் பெற்றவர். பெண்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் மத்தியில் காங்கிரஸ் தலைவி இந்திரா அம்மையார் வரை நெருக்கம் கண்டவர். அவர் இந்தப் படத்துக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். நூங்கம்பாக்கம் Good Luck theatre இல் அரங்கில் தணிக்கை நடந்தது.

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் எனப் பலரும் நடித்துள்ளனர்.

அதன் பிறகும் அப்படம் அந்நாளில் ரிலீஸ் கண்டது.!இன்று 26 ஆண்டுகள் கழித்து அந்த படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் காண்கிறது. அந்த நேரத்தில் படையப்பா படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்று சென்சார் கமிட்டியில் நான் தான் கடுமையாகப்போராடினேன்.

இரண்டு பேர் எதிர்க்க இரண்டு பேர் ஆதரிக்க கடும் போராட்டமாக இருந்தது. அப்புறம் ஒரு வழியாக அப்படம் வெளிவந்த போது தினமலரில் முதல் பக்கத்திலேயே இந்தப் பிரச்சனை தலைப்புச் செய்தியாக வந்நது. அன்று தினமலரில் இருந்து இன்று தினமணி ஆசிரியராகி இருக்கும் திரு லெனின் அவர்களுக்குக் கூட இது தெரியும்.

அந்த படத்தில் நீலாம்பரி என்னும் கதாபாத்திரம் ஒரு அரசியல் குறியீடாக குறிப்பாக அன்று ஆளும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவைச் சித்தரிப்பதாக ஜெயா அருணாச்சலம் குற்றம் சாட்டினார். அதே காலகட்டத்தில் தான் அர்ஜுன் நடித்த 'முதல்வன்' திரைப்படமும் வந்தது.

அதற்கான தணிக்கைக் குழுவில் நான் இருந்தபோது கருணாநிதி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. நான் அப்போது ம.தி.மு.கவில் இருந்தேன்.பாஜக- மதிமுக கூட்டணியில் இருந்தது தனிக்கதை.

கருணாநிதி என்னை அழைத்து நீங்களெல்லாம் தணிக்கைக் குழுவில் இருந்துமா இப்படி ஒரு படம் வெளி வருகிறது? எல்லாவற்றையும் அதிகாரம் இருந்தால் ஒரே நாளில் ஒருவன் தீர்த்துவிட முடியுமா? பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதேய்யா!! என்று கேட்டார். இல்லை ஒரு சினிமாவிற்காக ஒரு படத்திற்காக ஒரு கேளிக்கைக்காக அதை ஆதரித்தோமே தவிர வேறு குறிப்பிட்ட தனிப்பட்ட நோக்கங்கள் ஏதும் இல்லை என்று சொன்னேன்.

இதில் உங்கள் பெயர் வந்திருந்தாலோ அல்லது உங்களைக் குறிக்கும் காட்சிகள் இருந்திருந்தாலோ நான் அதில் முதலில் தலையிட்டு இருப்பேனா இல்லையா? என்று கேட்டேன். " சரிய்யா அது தெரியும் தானே விடுய்யா" என்றார். இன்றைக்கு படையப்பா படம் மறு வெளியீடு காண்பது மகிழ்ச்சிதான் வாழ்த்துகள்" இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சிறந்த எழுத்தாளர், வழக்கறிஞர், திமுக செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+