பாளையங்கோட்டை தொகுதி ஃபைனல் நிலவரம் என்ன? திமுக MLA சீட் ரேஸீல் யார்? யார்?
நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட பலரும் காய் நகர்த்தி வருவதோடு, சென்னையிலேயே முகாமிட்டு சீட் வாங்குவதற்கான கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டின் கவனிக்கத்தக்க தொகுதிகளில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டசபைத் தொகுதியும் ஒன்றாகும். கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கணிசமான வாக்கு வங்கிகளை வைத்திருப்பதால் பாளையங்கோட்டையில் திமுக எளிதாக வென்று முடியும் என நம்புகிறது.
இந்நிலையில் திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான அப்துல் வஹாப், அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர் அரிகேசவநல்லூர் SS மீரான், முன்னாள் அமைச்சர் மைதீன் கான், உள்ளிட்ட பலரும் பாளையங்கோட்டையில் சீட் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மைதீன் கானை பொறுத்தவரை வயது மூப்பு காரணமாக சீட் ரேஸில் பின் தங்கியிருப்பதால், அப்துல் வஹாப்பும், அரிகேசவநல்லூர் மீரானும் தான் சீட் ரேஸில் முன்னணியில் உள்ளார்கள்.
SS மீரானை பொறுத்தவரை 1989ஆம் ஆண்டு மக்கள் நல பணியாளராக இருந்து, படிப்படியாக திமுகவில் உயர்ந்து இன்று அமீரக திமுக பொறுப்பாளராக உள்ளார்.
இதனிடையே மாவட்டச் செயலாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான அப்துல் வஹாப்பும் மீண்டும் எப்படியாவது பாளையங்கோட்டை தொகுதியில் எம்.எல்.ஏ. சீட் வாங்கிவிடுவேன் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
இதற்கு மத்தியில் கே.ஏ.எம். நிஜாமிற்காக பாளையங்கோட்டை தொகுதியை மதிமுகவும் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திமுக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கும் பாளையங்கோட்டை தொகுதியை எதிர்பார்த்தி காத்திருக்கிறார். இதனால் யார் வேட்பாளராக நிறுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு தொகுதிவாசிகள் மற்றும் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications