பல்லாவரம் ஐடி ஊழியர் தற்கொலை: ரூ.3.50 லட்சமில்லை.. வார வட்டியில் ரூ 80 லட்சம் கடன்.. பகீர் ட்விஸ்ட்!
சென்னை: பல்லாவரம் அருகே மனைவி, இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர் விவகாரத்தில் பல பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவரது மனைவி காயத்ரி (36). இவர்களுக்கு நித்ய ஸ்ரீ, ஹரிகிருஷ்ணன் ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர்.
பிரகாஷ் சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி காயத்ரி நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார்.

கடன் தொல்லை
இவர்களுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரம் அறுக்கும் மின் ரம்பத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரகாஷ், மனைவி, குழந்தைகளை மின் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

3.50 லட்சம்
வீட்டில் ரூ 3.50 லட்சத்திற்கு கடன் பத்திரம் கைப்பற்றப்பட்டதால் அவர்கள் கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் பிரகாஷுக்கு ரூ 80 லட்சம் கடன் இருப்பது தெரியவந்தது. வீடு கட்ட ரூ 27 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார்.

ரூ 80 லட்சம்
மேலும் கார் வாங்கவும் மனைவிக்கு நாட்டு மருந்து கடை வைத்ததில் நஷ்டத்தை சரி செய்யவும் கடன் வாங்கியதாக தெரிகிறது. பிரகாஷ் இதுவரை மொத்தம் 9 பேரிடம் ரூ 80 லட்சம் வரை கடன் பெற்று இருந்தாராம். இதனை அவர் வார வட்டிக்கு வாங்கியுள்ளார். ஆனால் போக போக பிரகாஷால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியதாக தெரிகிறது.

மன உளைச்சல்
இதனால் மனஉளைச்சலில் இருந்த பிரகாஷ், கடனை அடைக்க திணறி ஒரு கட்டத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என கருதி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் எந்த மாதிரியான நெருக்கடியை கொடுத்தார்கள் என்பதை அறிய போலீஸார் கடன் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications