பாமாயில் விலை சல்லுனு ஏறுது.. ரேஷன்தாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு தந்த தித்திப்பு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமாயில், மற்றும் சூரியகாந்தி எண்ணெய் விலை திடீரென உயர்ந்துவிட்டது பொதுமக்களுக்கு கவலையை தந்து வருகிறது.. இந்த நேரத்தில் தமிழக அரசு, மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளதால், ரேஷன்தாரர்களுக்கு, நிம்மதியும், நம்பிக்கையும் பிறந்துள்ளது.

பாமாயில் விலை திடீரென உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு கலக்கம் சூழ்ந்தது.. எனினும் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, ஏழை, எளிய மக்களின் மனங்களை குளிர வைத்துள்ளது. ரேஷன்தாரர்களுக்கு என்ன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது?

palm oil ration shops tamil nadu government

பாமாயில்: சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக பாமாயில் விளங்கி வருகிறது.. அதனால்தான் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் இவை இரண்டுமே அதிகளவில் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதுநாள் வரை பாமாயில் லிட்டர் 90 ரூபாய்க்கும், சூரியகாந்தி எண்ணெய் லிட்டர் 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இறக்குமதி எண்ணெய்க்களின் மீதான வரியை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்திவிட்டது. அதன்படி, சுத்திகரிக்கப்படாத பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரியை, 20% வரையும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான வரியை 12.50% இருந்து 32.50% வரையிலும் உயர்த்தியிருக்கிறது.

திடீர் விலை உயர்வு: அதேசமயம், இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்கள் ஏற்கனவே அதிகளவில் கையிருப்பு இருப்பதால் எண்ணெய்க்களின் விலையை உயர்த்தக்கூடாது என்று இறக்குமதியாளர்களுக்கும், வணிகச்சங்கத்தினருக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.. ஆனால், இறக்குமதியாளர்கள் எண்ணெய் விலையை அதற்குள் உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி, பாமாயில் ரூ. 110க்கும், சூரியகாந்தி எண்ணெய் ரூ. 130க்கும் விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது. இப்படியொரு தகவல் வெளியானதால், பொதுமக்களுக்கு கலக்கம் சூழ்ந்துவிட்டது. பண்டிகை காலம் வந்துவிட்டதால், பாமாயில் எப்படி வாங்குவது? என்ற கவலையும் கிளம்பியது.

பாமாயில்: இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழ்நாடு ரேஷன் கடைகளில் பாமாயில் ஸ்டாக்கை உறுதி செய்ய கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதுமான எண்ணெய் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறதாம்..

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, எண்ணெய் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தும் ஸ்டாக் நிரப்பப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக தட்டுப்பாடு நிலவி வந்தது.. இப்போது மீண்டும் ஸ்டாக் கொண்டு வரப்பட்டுள்ளது, ரேஷன்தாரர்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.

ஸ்வீட் விலைகள்: எனினும், எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், ஓட்டல்களிலும் உணவு விலை புதிய உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... அப்படியானால், பண்டிகை காலங்களில் ஸ்வீட் மற்றும் உணவு பதார்த்தங்களின் விலையும் எகிறிவிடும் என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+