தீபாவளி ஸ்பெஷல்ஸ்.. "பலகாரத்தை" சாய்த்த பாமாயில், நெய், சர்க்கரை.. சல்லுன்னு ஏறிய இறக்குமதி வரிகள்
சென்னை: தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில், பலகாரப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. கிட்டத்தட்ட 30 ரூபாய் விலை அதிகமாகியிருப்பது, இல்லத்தரசிகளை கவலைக்குள்ளாக்கி வருகிறது. இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம்?
தமிழகத்தில் பண்டிகை காலம் துவங்கிவிட்ட நிலையில், அதுவும் தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகள் தட்டுப்பாடின்றி இருந்துவருகின்றன. எனவேதான், ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணியும் சில நாட்களுக்கு முன்பு நம்பிக்கை தகவலை வெளியிட்டிருந்தார்.

கோதுமை: 17,100 மெட்ரிக் டன் கோதுமையை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், கோதுமைகளும் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, தீபாவளி நெருங்கிவிட்டதால், ரேஷன் கடையில் சர்க்கரை, கோதுமை தட்டுப்பாடுகள் இல்லாதவாறு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுபோக பருவமழையும் ஆரம்பித்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதாவது, தாழ்வான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உள்ள பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன. வெள்ளம், கனமழை பெய்துள்ள இடங்களில் பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
ரேஷன் பொருட்கள்: ரேஷனில் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்தாலும், தீபாவளி பலகார பொருட்களின் விலை 50 சதவீதத்துக்கு உயர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், சமையல் எண்ணெய், முந்திரி, நெய், கடலை மாவு போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதால், பலகார வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை உயர்ந்துவிட்டதாம்.
இதில் சமையல் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.. சமையல் எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது...
பாமாயில்: சமீபத்தில், கச்சா பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்களின் இறக்குமதியானது, 5.5 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதமாகவும், பாமாயில், சோயாபீன், எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்க்கு இறக்குமதி வரி 13.75 சதவீதத்தில் இருந்து 33.75 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. திடீரென உயர்ந்த இறக்குமதி வரி உயர்வு காரணமாக, எண்ணெய் விலையிலும் உயர்வு காணப்படுகிறது.
பாமாயில் லிட்டர் ரூ.120 வரை விற்பனையாகி வந்த நிலையில், ரூ.150 க்கு விற்பனையாகிறது.. கடலை எண்ணெய் ரூ.180-ல் இருந்து ரூ.210 ஆக விலை அதிகரித்துள்ளது. தேங்காய் எண்ணெய் ரூ.170-ல் இருந்து ரூ.200 ஆக உயர்ந்துள்ளது.. அந்தவகையில், கிட்டத்தட்ட 30 முதல் 50 ரூபாய் அளவுக்கு எண்ணெய் விலைகள் அதிகரித்திருக்கின்றன.
தேங்காய் எண்ணெய்: நெய் ஒரு லிட்டர் ரூ.550-ல் இருந்து ரூ.620 வரை விலை உயர்ந்துள்ளது. சர்க்கரை விலையும் கிலோவுக்கு ரூ.4 வரை உயர்ந்துள்ளது. கடலை மாவு ரூ.80-ல் இருந்து ரூ.120 வரை விலை உயர்ந்துள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையின் பலகார பொருட்களிலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications