பாமாயில் வாங்கிட்டீங்களா? இங்கே பார்த்தீங்களா விலையை? விருதுநகர் போறீங்களா? சர்னு ஏறிய மளிகை ரேட்
சென்னை: சமீப காலமாகவே, உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்து வந்த நிலையில், தற்போது மேலும் உயர்ந்து கலக்கத்தை தந்துள்ளது.. அதுகுறித்த கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது.. என்ன பாருங்கள்.
பருவமழை, புயல், வெள்ளநீரில் பயிர்கள் மூழ்கியது, விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களினால், அரிசி விலை தமிழகத்தில் உயர்ந்து வருகிறது..

பருவமழை: டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி நிலவிய வறட்சியின் காரணமாக நெல் மகசூல் பெருமளவு குறைந்ததால் அனைத்து வகையான அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.12 முதல் 15 வரை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே அரிசி விலையை குறைக்க வேண்டி, அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
அதேபோல, உணவு பொருட்களிலேயே பருப்புகளை தவிர்க்க முடியாது.. அந்த அளவுக்கு அதன் அத்தியாவசிய தேவையாக உள்ளது.. இனி வரக்கூடிய நாட்களில் பருப்பின் விலை அதிகரிக்கும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
பருப்புகள்: கடந்த 2022-23ல் ரூ.122.67 லட்சம் ஹெக்டேர்களில் இருந்து 121.61 லட்சம் டன்கள் உற்பத்தி குறைந்துள்ளதாம்.. அதுமட்டுமல்ல, கடந்த சில நாட்களாகவே, பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் பருவமழை காரணமாக அறுவடைக்கு தயாரான பயிரின் இழப்புகளும், இந்த பருப்பு விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல, கர்நாடகாவில் பூஞ்சைகளின் தாக்குதல் காரணமாக விளைச்சலில் 30 சதவீதம் குறைந்துவிட்டதாட்ம.. எனவே, குறைந்த அளவில் விளைச்சல் காரணமாக, சனா விலை ரூ. 6,000/குவிண்டால் தாண்டும் என்கிறார்கள்.. தற்சமயம், மூங், மசூர், துவரை மற்றும் உளுந்து போன்ற பருப்புகள் கிலோ ரூ. 130-140 க்கு மேல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பாமாயில்: அதேபோல பாமாயில் 15 கிலோ ரூ.1390 என விற்கப்பட்ட நிலையில், இந்த விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தபடியே உள்ளது.. ஆனாலும், இந்த விலை உயர்வு அதிகரித்தபடியே உள்ளது. இதோ விருதுநகர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களின் விலை வெளியாகி உள்ளது.. இதுதான் அந்த லிஸ்ட் :
குண்டூர் வத்தல் 100 கிலோவிற்கு ரூ. 2000 குறைந்து ரூ. 16,000 முதல் ரூ. 19,000, மல்லி நாடு 40 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ. 3800 முதல் ரூ. 4100, உளுந்தம் பருப்பு லயன் 100 கிலோவிற்கு ரூ. 300 குறைந்து ரூ.10,000, பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 300 குறைந்து ரூ.10,000, பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 300 குறைந்து ரூ. 5500 என்று விற்பனையாகிறது.
விலை உயர்வு: இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ. 2780, ந.எண்ணெய் 15 கிலோ ரூ. 6765, பாமாலின் 15 கிலோவிற்கு ரூ. 25 உயர்ந்து 1415 ரூபாய் உயர்ந்து மிரட்டுகிறது.. அதேபோல, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ. 10 குறைந்து ரூ. 1980, ரவை 30 கிலோ ரூ. 1480, மைதா 90 கிலோ ரூ. 4440, பொரிகடலை 55 கிலோ ரூ. 5000 என்று விற்கப்படுகிறது....
துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ. 13,600, பாசிப்பருப்பு 100 கிலோ ரூ. 10,500, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 6800, தொலிபருப்பு 100 கிலோ ரூ. 10,400, மல்லி லயன் 40 கிலோ ரூ. 3450 முதல் ரூ. 3600 என விற்பனை செய்யப்படுகிறது.
எள் எண்ணெய்: உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோ ரூ. 12,200, உளுந்து நாடு 100 கிலோ ரூ. 9200, முண்டு வத்தல் புதுசு 100 கிலோவிற்கு ரூ. 1000 குறைந்து ரூ. 17,000 முதல் ரூ. 18,500, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ. 1000 குறைந்து ரூ. 17,000 முதல் ரூ. 18,500, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 5600, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 2700 என விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications