Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாம் கொடுக்கும் பான்கார்டு தகவல்களை நைசாக திருடும் கம்பெனிகள்.. சாட்டையை சுழற்றும் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பான் கார்டுகள் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாகிவிட்ட நிலையில், இந்த தகவல்களை வைத்து பொதுமக்களின் தகவல்களை எடுப்போருக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் சாட்டையை சுழற்றியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பான் கார்டுகள் நமக்கு இன்றியமையாத ஆவணமாகிவிட்டது. நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டுமானால், நமக்கு பான் கார்டுகள் கட்டாயம் தேவை. பெரிய அளவிலான தொகைகளை அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான தொகையை அனுப்ப வேண்டுமானால் பான் கார்டு இருந்தால் மட்டுமே சாத்தியம்.

pan card central government

அதிக வருமானம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகும். குறிப்பாக, வருடத்துக்கு 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிவரும். அப்படி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பான் கார்டு அவசியம் தேவைப்படும்.

வங்கி கணக்கு: ஒருவர் வங்கிக்கணக்கை துவங்குவதானாலும், பான் கார்டுகள் இல்லாவிட்டால் துவங்க முடியாது.. பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமானாலும், டிமேட் கணக்குக்கு இந்த பான் கார்டுகள் தேவை.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற கார்டுகளை பெற வேண்டுமானாலும், பான் கார்டு தேவை.. அபோல, ஒருவர், ஒன்றிற்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.. அதை பயன்படுத்தவும் முடியாது என்பதால், ஒரு கார்டை திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும்.

இந்நிலையில், பான் கார்டு பயன்படுத்துவது குறித்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. "ஐ4சி" என்று சொல்லப்படும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம்தான், இது தொடர்பான நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள், நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய உத்தரவினை பிறப்பித்திருக்கிறது. அதன்படி, பான் கார்டு விபரங்களை, உரிய அனுமதி மற்றும் அங்கீகாரமின்றி பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனித்தகவல்கள்: இதற்கு காரணம், பான் கார்டு விபரத்தை பெற்றுக்கொண்டு, தனிநபர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் சில தனித்தகவல்களை சில நிறுவனங்கள் பெறுகின்றனவாம்.. இந்த நிறுவனங்கள், அவற்றை வணிக நோக்கில் பகிர்வதுடன், தனிநபரின் கடன் தகுதியை அறியக்கூடிய சிபில் கிரெடிட் ஸ்கோரை அறிந்து, அதற்கேற்ப கஸ்டமரையும் அணுகுகின்றன.

இது தனித்தகவல் விதிமீறலுக்குள் அடங்காவிட்டாலும், வருமான வரித் துறையின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப சேவையை அங்கீகாரமின்றியும், அனுமதி பெறாமலும் தொடர்பு கொள்வதாக தெரிகிறது. அதனால்தான், இதற்கு கடிவாளத்தை போட, அரசு முனைப்பு காட்டியதுடன், பான் கார்டு விபரங்களை, உரிய அனுமதி மற்றும் அங்கீகாரமின்றி பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

பெருத்த கவனம்: மின்னணு தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம், 2023 விரைவில் அமலுக்கு வரவுள்ள நிலையில், பான் கார்டு விபரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையை இப்போதே அதிரடியாக ஆரம்பித்திருப்பது, பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+