பான் கார்டு தொலைஞ்சிடுச்சா.. உங்க பான் அட்டையை திரும்ப பெற முடியுமா.. இதோ இதை படிங்க - அவசியம்
சென்னை: பான் கார்டினை நாம் தொலைத்துவிட்டால் அதை திரும்ப பெற முடியுமா? என்று சிலருக்கு சந்தேகம் இருக்கலாம்.. இதோ அதற்கும் ஒரு எளிய வழி உள்ளது.
நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று, பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன.. காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும்.

பான் கார்டு: நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.. அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம், ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.. பான் அட்டையை இதில் கட்டணமில்லாமல் இணைக்கலாம்.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், நீங்கள் இதுவரை வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவில்லை என்றால், உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்த பின்னரே நீங்கள் அவ்வாறு செய்ய முடியும்.
காலக்கெடு: பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதியை தவறவிட்ட ஒரு நபர், காலக்கெடு முடிந்த பிறகும் அதை இணைக்க முடியும். இருப்பினும், தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பான் மீண்டும் செயல்படத் தொடங்கும்.
உதாரணமாக, ஜூலை 20ம் தேதி (அபராதம் செலுத்திய பிறகு) ஒரு நபர் தனது பான் எண்ணை ஆதாருடன் இணைக்கக் கோரினால், ஆகஸ்ட் 19ம் தேதி அல்லது அதற்கு முன் பான் செயல்பாட்டிற்கு வரும்.
செயலிழந்த பான் கார்டை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. இதனால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும்.. குறிப்பாக, முக்கிய நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் பாதிப்பு உண்டாகலாம். பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காததால், பெரிய தொகையை வங்கியில் செலுத்துவது, கடன் பெறுவது, மியூச்சுவல் முதலீடு போன்றவை சிக்கலாகலாம். பான் கார்டு செயலிழப்பால், பல முக்கிய நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் போகும்.
திரும்ப பெற முடியுமா? : பான்கார்டு தொலைந்து விட்டால், திரும்ப பெறுவது எப்படி தெரியுமா? ஆன்லைனிலேயே இதற்கு வழி உள்ளது.. வருமானவரித்துறை புதிதாக இதற்கொரு வசதியை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.. இனி பான் கார்டு தேவைப்படுவோருக்கு இ-பான் கார்டு வழங்கப்படுகிறது. இ-பான் என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட டிஜிட்டல் பான் அட்டை ஆகும்.

என்ன செய்ய வேண்டும்:
- முதலில் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்
- அதில் கீழாக உள்ள our services என்ற ஆப்ஷனின் கீழ், instant E-PAN என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
- இதற்கு முன்பாக நீங்கள் e-pan டவுன்லோடு செய்யவில்லை எனில், get new e-pan என்பதை கிளிக் செய்யவும்.
- e-pan டவுன்லோட் செய்யும் முன்பு, check status என்பதன் கீழ் உள்ள download pan என்பதை கிளிக் கொடுத்து continue என்பதை கொடுக்கவும்.
- அதன் பிறகு உங்களது 12 இலக்க ஆதார் எண்ணினை கேட்கும். அதனை கொடுத்து விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன்பிறகு "continue" என்பதை கிளிக் செய்யவும்.
பிரிண்ட்: அதன் பிறகு உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும். ஒடிபியை கொடுத்து கிளிக் செய்வதற்கு முன்பு, உங்களது விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா? குறிப்பாக இ-மெயில் ஐடி சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொடுக்கவும். அதன் பிறகு உங்களது e-pan என்பது உங்களது மெயில் ஐடிக்கு வரும். அதனை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
இன்னொரு முறை: https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்ற வெப்சைட்டிற்கு செல்லவும். அங்கு பான் எண் (Only for individual), பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து, கேப்ட்சா எழுத்துகளை பதிவிட வேண்டும்.
இதன் மூலம் எளிதில் பிடிஎஃப் வடிவில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதில் Acknowledgement number கொடுத்தும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதில் பிறந்த தேதி, கேப்ட்சா எழுத்தினை கொடுக்கவும். இதனை கொடுத்தும் உங்களது பான் கார்டினை பிடிஎஃப் வடிவில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
வழிமுறைகள்: இந்த வழிமுறைகளை செய்யும்போது, ஒருவேளை பான் எண் மறந்துவிட்டால், ஆதார் எண்னை பதிவிடவும் - விதிமுறைகளை படித்து பார்த்த பிறகே, Accept என்ற ஆப்ஷனை தர வேண்டும்.. தொலைந்துபோன பான்கார்டை உடனடியாக பெறுவதற்கு கட்டணங்கள் எதுவும் செலுத்த தேவையில்லை. ஆதார் நம்பர் இருந்தால் மட்டும் போதும், பான் கார்டை பெற்றுவிடலாம். இந்த பான் கார்டினை tin - NSDL அல்லது UTIITSL போன்ற இணைய தளங்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications