பான் கார்டு இருக்கா? இனி ஆதாருடன் தனியே இணைக்க தேவையில்லை! மத்திய அரசு கொண்டு வரும் புதிய மாற்றம்..
சென்னை: முக்கிய அடையாள அட்டையாக உள்ள பான் கார்டு பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளிாகி உள்ளது. இதுதொடர்பாக புதிய விதியை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. அதாவது தற்போது பான் கார்டு - ஆதார் அட்டை இணைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் பற்றி இங்கு பார்ப்போம்.
பான் கார்டு (PAN Card அல்லது Permanent Account Number) நம் நாட்டை பொறுத்தவரை முக்கிய ஆவணமாக உள்ளது. பிறந்த தேதிக்கான சான்றாகவும், புகைப்பட சான்றாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர வருமான வரி செலுத்துவோருக்கு இந்த பான் கார்டு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இதுதவிர நிதி சார்ந்த விஷயங்கள் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு அடையாள அட்டையாக இது விளங்கி வருகிறது. இதனால் தற்போது பான் கார்டு இன்றி யாரும் இருப்பது இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. ஒருவேளை பான் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்து குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அதனை பெற்று கொள்ள முடியும்.
நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் இந்த பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பலரும் பான் கார்டு - ஆதார் கார்டு இணைப்பில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வருமான வரி செலுத்துவோருக்கு பான் கார்டுடன் - ஆதார் கார்டை இணைந்திருப்பது அவசியமாகும்.
இதற்கு ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறை சார்பில் காலஅவகாசம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காலஅவகாசம் என்பது ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் முடிந்துவிட்டது. இந்த காலக்கெடுவுக்குள் பான் கார்டு - ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரூ.1,000 அபராதம் செலுத்தி இணைக்க வேண்டும்.
இந்நிலையில் தான் மத்திய அரசு சார்பில் தற்போது பான் கார்டு விதியில் சில முக்கிய மாற்றங்களை செய்து புதிய விதியை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த புதிய விதி வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் பான் கார்டு - ஆதார் கார்டு ஆகியவற்றை இணைக்காமல் உள்ளவர்களுக்கு நற்செய்தி வெளியாகி உள்ளது. அதாவது புதிய விதியின்படி நாம் இனி தனியே இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.
மாறாக பான் கார்டு விண்ணப்பம் செய்யும்போது ஆதார் அட்டையை ஆவணமாக வழங்கினால் நேரடியாக பான் கார்டும், ஆதார் அட்டையும் ஒன்றாக இணைக்கப்பட்டு விடும். இதனால் பான் கார்டு வாங்கிய பிறகு தனியே அதனை ஆதார் கார்டுடன் இணைக்க தேவையில்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் பான் கார்டு உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தற்போது பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் குட்நியூஸ் வெளியாகி உள்ளது. அதன்படி 01.07.2017 ஆகிய தேதிக்கு பிறகு ஆதார் வழங்கி பான் கார்டு பெற்றவர்களும் இனி தனியே இணைக்க வேண்டாம். அவர்களுக்கான ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண்கள் நேரடியாக இணைக்கப்பட்டு விடும். அதேவேளையில் 01.07.2017 ம் தேதிக்கு முன்பாக பான் கார்டு பெற்றவர்கள் ஆதாருடன் இணைக்காவிட்டால் அவர்கள் தனியே அதனை இணைத்து கொள்ள வேண்டும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications