முக்குலத்தோர் புலிப்படையை தொடர்ந்து பனங்காட்டு படையும் ஆவேசம்.. பா. ரஞ்சித்துக்கு எச்சரிக்கை
Recommended Video
சென்னை: ராஜராஜ சோழன் பற்றிய இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சை, பனங்காட்டு படை கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் கடந்த 5ம் தேதி இரவு நடந்தது. இதில், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம் என்று கூறினார்.
இதுகுறித்து, முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்எல்ஏவுமான கருணாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ராஜராஜ சோழன் குறித்து பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இது அறிவுரை கலந்த எச்சரிக்கை என்று தெரிவித்திருந்தார்.

முக்குலத்தோர் புலிப்படை
தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் என்பவன் இந்தப் பூமிப்பந்தின் மனித அதிசயம். தமிழர் மரபின் உச்சம். நீங்களும் இந்த தமிழர் இனத்தில் பிறந்தவன் என்று பெருமைபட்டுக் கொள்ளுங்கள். அதைவிடுத்து பார்ப்பனர்களின் பங்காளியை போல் எதிர்வரிசையில் நின்று கொக்கரிக்காதீர். தமிழர் முன்னோர்களின் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இது அறிவுரை கலந்த எச்சரிக்கை என்று கூறினார்.

ஹரி நாடார்
இந்த நிலையில், பனங்காட்டு படை கட்சியின், ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த கல்வியாண்டின், 7ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் பக்கம் எண்.59ல் முன்னாள் முதல்வர் காமராஜரை குறித்த தவறான தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோரை சந்தித்து தகவல் தெரிவித்துள்ளோம், அந்த பகுதியை உடனடியாக நீக்க அவர்கள் உறுதியளித்தனர். அந்த பகுதியை நீக்க பள்ளி கல்வித்துறை காலம் தாழ்த்தினால், நாடார் சமூகத்தினர் மாநிலம் முழுவதும் இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

சாதிய மோதல்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ராஜ ராஜ சோழனை குறித்து அவதூறாக பேசியதை நாடார் சமூகம் வன்மையாக கண்டிக்கிறது. இது சாதிய மோதல்களை உருவாக்க முக்கிய காரணமாக அமையும் என்றார்.

கண்டனம்
மேலும், "ரஞ்சித்தை நேரில் பார்க்கும் உண்மையான தமிழன் யாராக இருந்தாலும், மாமன்னர் ராஜ ராஜ சோழனை அவதூறாக பேசியதற்காக அவரை கண்டிக்க வேண்டும்" இவ்வாறு மேலும் சில வார்த்தையை பயன்படுத்தி, கடுமையாக சாடினார், ஹரி நாடார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications