மனு கொடுக்க சென்ற போது விபத்தில் பலியான ஊராட்சி மன்றத் தலைவர்! முதல்வர் காதுக்கு சென்ற துயரத் தகவல்!
சென்னை: ஊரக வளர்சித்துறை இயக்குநரை சந்தித்து மனு கொடுப்பதற்காக சென்னைக்கு காரில் சென்ற போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இருவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மும்பை சென்றுள்ள நிலையில், அங்கிருந்த அவருக்கு இந்த துயரத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விபத்தில் பலியான இருவரும் மிக ஆக்டிவாக மக்கள் பணியாற்றக் கூடியவர்கள் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.மூலம் அறிந்துகொண்ட முதல்வர், உடனடியாக இரங்கல் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பசாமி அவர்களும், கிருஷ்ணபேரி ஊராட்சி மன்றத் தலைவரான வினோதினி அவர்களின் கணவரான அபிமன்னன் அவர்களும், ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்களைச் சந்தித்து மனு கொடுக்கச் சென்னைக்குக் காரில் சென்று கொண்டிருந்த போது, மணப்பாறை அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.
கருப்பசாமி மற்றும் அபிமன்னன் ஆகியோரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கோமதி சங்கர் (நடுவப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டிச்செல்வியின் கணவர்) அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் விரைவில் நலம்பெற விழைகிறேன்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications