கேமரா இத்தனை நிக்குதே.. இந்திரஜா சங்கரை விட்டுடாதீங்க.. ரோபோவுக்காக இதை செய்யுங்க! ராஜ்கமல் கண்ணீர்
சென்னை: ரோபோ சங்கரின் இடத்தை நிரப்ப அவரது மகள் பாண்டியம்மாள் இந்திரஜா ரோபோ சங்கரால் மட்டும்தான் முடியும்.. எனவே இந்திரஜாவுக்கு ப்ளீஸ் வாய்ப்பை கொடுங்கள், அவரது வடிவத்தில் ரோபோ சங்கரை நாம் மீண்டும் பார்க்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இந்த உருக்கமான வீடியோவை ரோபோ சங்கரின் ரசிகர்களும் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
டிவியில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் மக்களிடம் அறிமுகமானவர் ரோபோ சங்கர்... இதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற ரோபோ சங்கர், சினிமாவிலும் காலடி வைத்து, காமெடி நடிகராக உயர்ந்தார்.

இவரது மனைவி பிரியங்காவும் சின்னத்திரை நடிகையாக உள்ளார். இவர்களின் மகள் இந்திரஜா, 'பிகில்' படத்தில் விஜயுடன் நடித்துள்ளார்.
பிரியங்கா சங்கர்
சமீப காலமாகவே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது.. மஞ்சள்காமாலை நோயால் அவதிப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டு, அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தார். இதையடுத்து, சினிமாக்களிலும், டிவி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார்.
எனினும், கடந்த சில தினங்களாகவே உணவுக்குழாய் மற்றும் கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், நேற்றிரவு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ராஜ்கமல்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்தவகையில், சீரியல் நடிகர் ராஜ்கமல் ரோபோ சங்கரின் உடலை கண்டு கதறி அழுதார்..
பின்னர் அழுதுகொண்டே செய்தியாளர்களிடம் ராஜ்கமல் பேசும்போது, "மனோபாலா மரணத்தின்போது, அஞ்சலி செலுத்த ரோபோ சங்கருடன் நானும் வந்திருந்தேன்.. அப்போது சுற்றியிருந்த கேமராக்களை பார்த்து, மாப்ளை, எனக்கெல்லாம் ஏதாவது ஆகிவிட்டால், இப்படி கேமராக்கள் வருமா? நாமதான் சாதிச்சிட்டோமோ? ஏதாவது நடந்துவிட்டால், எல்லா மீடியாவும் கவர் பண்ணுமா?ன்னு கேட்டார்.. இப்போ எல்லா மீடியாக்களும், கேமராக்களும் நிக்குதே.
46 வயதுதான் ஆகுது
எல்லாருமே உடம்பை நல்லா பார்த்துக்குங்க.. என்னதான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் இப்படிதான் வந்து நின்றாகணும்.. வாழ்க்கையில் எவ்வளவு ஜாலி செய்தாலும், உடம்பை விட்டுடாதீங்க..
46 வயதில் இறந்திருக்கிறார் ரோபோ சங்கர்.. அவர் இறந்துவிட்டார் என்பதைவிட, 46 வயதில் இறந்ததுதான் பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.. அவரது வயதை மீடியாக்களில் சொன்னபோதுதான், அனைவருக்குமே தெரியவந்தது.. அவரது உருவம் பார்ப்பதற்கு 46 போல் இருக்காது.. 46 வயதிலேயே மரணம் என்பதை யாராலும் ஏற்க முடியவில்லை.
உடம்பை பார்த்துக்குங்க
பலருக்கும் பல வேலைகள் இருக்கலாம், அழுத்தங்கள் இருக்கலாம், பிரச்சனைகள் இருக்கலாம்.. ஆனாலும் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.
இன்று ஒரு கலைஞனை இழந்துவிட்டு அந்த குடும்பம் படும் நிலைமையை பாருங்கள்.. இதற்கு பிறகு அடுத்து என்ன? என்பது அந்த குடும்பத்தினருக்கு தெரியவில்லை.. எனவே திரையுலகத்தினரிடம் நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால், ரோபோவின் மகள் திறமையானவர்.. எனவே தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும், சிறந்த கேரக்டர் ரோலை சினிமாவில் வாய்ப்பாக தர வேண்டும்.
இந்திரஜா ரோபோ சங்கர்
ரோபோ சங்கரின் இடத்தை நிரப்ப பாண்டியம்மாள் இந்திரஜா ரோபோ சங்கரால் மட்டும்தான் முடியும்.. எனவே இந்திரஜாவுக்கு ப்ளீஸ் வாய்ப்பை கொடுங்கள், அவரது வடிவத்தில் ரோபோ சங்கரை நாம் மீண்டும் பார்க்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.
நடிகர் சூரி
ரோபோ சங்கருக்கு கமல்ஹாசன் அஞ்சலி செலுத்த வந்தபோது, "அப்பா அப்பா எந்திரிப்பா, உலகநாயகன் வந்திருக்காருப்பா, உன்ன பாக்க வந்திருக்காருப்பா, உன் பேரனை தூக்கிட்டாருப்பா என அழுது கொண்டே சொன்னார்.. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், தனுஷின் தோள் மீது சாய்ந்து கதறி அழுதார்.
அதேபோல தனுஷ் அஞ்சலி செலுத்த வந்தபோது அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார் இந்திரஜா.. அப்போது தனுஷ்"நான் இருக்கேன்மா பார்த்துக்கொள்கிறேன்" என்று தனுஷ் இந்திரஜா சங்கருக்கு ஆறுதல் சொன்னார். நடிகர் சூரி அஞ்சலி செலுத்த வந்தபோது, கதறி அழுத இந்திரஜாவுக்கு ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications