ஓபிஎஸ்ஸுக்கு பண்ருட்டி தந்த ஐடியா! விடக்கூடாது.. சட்டென டெல்லிக்கு பறந்த எடப்பாடி டீம்! என்னாச்சு?
உச்ச நீதிமன்ற உத்தரவால் சோர்வாக இருந்த ஓ பன்னீர்செல்வம் இதனால் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்து உள்ளார்.
சென்னை: அதிமுகவில் சின்னம் பிரச்சனை ஓய்ந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில்தான் தற்போது ஓ பன்னீர்செல்வம் தரப்பு புதிய பிரச்சனை ஒன்றை கிளப்பி உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம்.
வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாத பட்சத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு போடப்பட்டது.

தீர்ப்பு
இதையடுத்து வேட்பாளரை தேர்வு செய்யும் அதிமுக ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்து போட அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இவருக்கான அதிகாரம் வழங்கி அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சார்பாக வாக்கு சீட்டு ஒன்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக இந்த பார்ம் அனுப்பப்பட்டது. ஓ பன்னீர்செல்வத்திற்கும் இந்த பார்ம் அனுப்பப்பட்டு இருந்தது . இதில் அதிமுக வேட்பாளராக கே. எஸ் தென்னரசுவை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அவரின் பெயரை டிக் அடிக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பெயர் இடம்பெறவில்லை
ஆனால் ஓ பன்னீர்செல்வம் வேட்பாளர் செந்தில் பெயர் இடம்பெறவில்லை. வெறுமனே தென்னரசு பெயர் இல்லாத பட்சத்தில் இருக்கின்ற பாக்சில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களை தேர்வு செய்ய முடியும். பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களை அதில் குறிப்பிட முடியும். இந்த வாக்கு சீட்டுடன் தமிழ் மகன் உசேனுக்கு வேட்பளாரை தேர்வில் கையெழுத்து போட அதிகாரம் அளித்த தீர்மானமும் இடம்பெற்று உள்ளது. இந்த இரண்டும் பொதுக்குழு உறுப்பினர்கள் 2675 பேருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் இதை பூர்த்தி செய்து நேற்று மாலை 7 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டது.

தமிழ் மகன் டெல்லி
இந்த பார்ம்களை எடுத்துக்கொண்டு தமிழ் மகன் தரப்பு தற்போது டெல்லி சென்றுள்ளது. இந்த நிலையில்தான் நேற்று ஓ பன்னீர்செல்வத்தின் ஆலோசகர் பண்ட்ருட்டி ராமசந்திரன் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது, தமிழ் மகன் இதில் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆனால் அவர் எடப்பாடி ஆள் போல செயல்பட்டு இருக்கிறார். ஒரு வேட்பாளர் பெயரை மட்டும் போடுவது தவறு. அவர் நடந்து கொண்ட விதமே தவறுதான். அதனால் இதை தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம். இறுதியில் தேர்தல் ஆணையம் தானே இதில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தேர்தல்
அதனால் தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம் என்று கூறி இருக்கிறாராம். உச்ச நீதிமன்றாட உத்தரவால் சோர்வாக இருந்த ஓ பன்னீர்செல்வம் இதனால் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்து உள்ளார். இதையடுத்தே எடப்பாடி வேட்பாளருக்கு எதிராக நேற்று ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார் . இன்றே ஓ பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications