“பாஜக கூட்டணி ஆபத்தானது.. ஓபிஎஸ் வெளியேற வேண்டும்” - பற்ற வைத்த பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: "தேசிய ஜனநாயக கூட்டணி ஆபத்தானது, அதில் இருப்பதே தவறு" என அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும் என பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்தது போட்டியிட்டனர். அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக கூட்டணியில் தனி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்றும், 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக டிடிவி தினகரன் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், இருவரும் தங்கள் கூட்டணியில்தான் இருக்கின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.
அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்த நிலையில், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் அணியின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு ஆபத்தான கூட்டணி. பா.ஜ.கவை வளர்க்கக்கூடிய எந்தக் கூட்டணியுன் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காது. ஓபிஎஸ்-க்கு நன்மை இல்லை.. வெளியே வந்துவிட்டால் நிம்மதி. தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும். ஓபிஎஸ்ஸை பாஜக புறக்கணிக்கிறது, அதை அவர் வரப்பிரசாதமாக எடுத்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications