பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பு.. வெளியானது அறிவிப்பு.. ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்
சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மேலும் 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த முதல் நிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. எடையார்பாக்கம் கிராமத்தில் இந்த நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. "நிலம் குறித்த பாத்தியதை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் போலவே பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றிய 20 கிராமங்களில் சுமார் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்காக பரந்தூர், வளத்தூர், பொடவூர், நல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகானபுரம் உள்ளிட்ட கிராங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறன. குடியிருப்புக்ள், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் வருவாய்த்துறை ஈடுபட்டுள்ளது. புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் விற்பதற்கான சிறப்பு வருவாய் துறை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டார மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல பரந்தூர் சுற்று வட்டார கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒருபக்கம் தொடர்ந்து எதிர்ப்பு உள்ள நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 67 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த முதல் நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், எடையார்பாக்கம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்திற்கான பாத்தியம் உள்ளவர்கள் தங்களது கோரிக்கை அல்லது ஆட்சேபனையை ஒரு மாதத்திற்குள் அதாவது 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சேபனைகள் மீதான விசாரணை ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications