துர்கா ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கியது ஏன்..? திமுக எம்எல்ஏ பரந்தாமன் விளக்கம்
சென்னை: அன்னையிடம் ஆசி பெறுவது பற்றி பதவிக்காக தவழ்ந்தவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது என திமுக எம்.எல்.ஏ.பரந்தாமன் தனது டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
துர்கா ஸ்டாலினிடம் பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆசி வாங்கியதை ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் ஒருவர் ட்ரோல் செய்து டிவிட்டரில் விமர்சித்திருந்தார்.
அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பரந்தாமன் எம்.எல்.ஏ. இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பதவியேற்பு
கடந்த 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வந்த துர்கா ஸ்டாலினிடம், சென்னை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இவரை போலவே இன்னும் பலரும் துர்கா ஸ்டாலினிடம் ஆசி வாங்கும் பொருட்டு வணங்கினார்கள். இதனை கடுமையாக அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் பரந்தாமனின் சுயமரியாதை என்ற பெயரில் ட்ரோல் செய்திருந்தார்.

சமூக வலைதளம்
தொலைக்காட்சி விவாதங்களில் சுயமரியாதை பற்றி பேசுகின்ற எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன் சுயமரியாதையை தேடிய போது கிளிக்கியது என துர்கா ஸ்டாலினிடம் ஆசி பெறும் வீடியோவை ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பரந்தாமன் எம்.எல்.ஏ., ''எங்கள் திமுக குடும்பத்தில் அன்னையிடம் ஆசி பெற்றதை பதவிக்காக தவழ்ந்தவர்களுக்கு சுய மரியாதை பற்றி என்ன தெரியும்?'' என வினவியுள்ளார்.

காலில் விழுவது
திமுகவை பொறுத்தவரை காலில் விழும் கலாச்சாரமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலினும் சரி அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சரி இதனை துளியும் விரும்பவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும் ஒரு சில நிர்வாகிகள், பிரமுகர்கள் ஆசி பெற்று அவர்களை தர்மசங்கடத்திற்கு தள்ளும் நிகழ்வு தொடர்கிறது. இதனிடையே அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா காலத்திலும் சரி இப்போது அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியிடமும் சரி காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரம் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த கவனம்
திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுவிடங்களில் மிகுந்த கவனமுடன் நடந்துகொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பலமுறை அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications