பரனூர் சுங்கச்சாவடியிலா இப்படி ஒரு சம்பவம்.. வியந்த டோல்கேட் ஊழியர்கள்
சென்னை: தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றுள்ளது. நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் 10 வாகனங்கள் மட்டுமே கடந்து சென்றதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர். தீபாவளி நாளான நேற்று சென்னை மாநகரமே வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையை ஒட்டியுள்ள பரனூர் சுங்கச்சாவடியிலும் அது எதிரொலித்தது.
சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி என்பது சென்னையின் மிக முக்கியமான சுங்கச்சாவடி ஆகும். சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் , கோவை ,திருப்பூர் , ஈரோடு, சேலம், செல்லும் பேருந்துகள் , தஞ்சாவூர் அரியலூர் , பெரம்பலூர், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் வாகனங்கள் செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும்.

இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் மிக அதிகமாக இருக்கும். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் கடந்த ஒரு வாரமாகவே பரனூரில் நெரிசல் அதிகமாக இருந்தது. குறிப்பாக கடந்த செவ்வாய்க்கிழமை லட்சக்கணக்கான வாகனங்கள் சென்றன. நேற்று முன்தினம்.. அதாவது புதன்கிழமை அன்று விடிய விடிய வாகனங்கள் சென்றன. இப்படி தீபாவளிக்கு மூன்று நாளைக்கு முன்பு சுமார் 10 லட்சம் வாகனங்கள் சென்றன.

இதனால் சுங்கச்சாவடியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். ஆனால் தீபாவளி அன்று வாகனங்கள் எதுவுமின்றி பரனூர் சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் 10 வாகனங்கள் மட்டுமே கடந்து சென்றதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications