Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீ பரவட்டும் வசனத்திற்கு சென்சாரில் வெட்டு.. இந்தி திணிப்பு பற்றி அப்படி என்ன பேசினார் அறிஞர் அண்ணா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பராசக்தி படத்தில் இருந்து முன்னாள் முதல்வர் அண்ணாவின் முக்கிய வசனம் நீக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், சோசியல் மீடியாவில் அண்ணா பேசிய வார்த்தைகள் குறித்த விவாதம் தொடங்கி இருக்கிறது. இதனால் அண்ணாவின் இந்தி திணிப்பு பற்றி வசனங்களும், சுயமரியாதை மற்றும் தமிழ்நாடு பெயர்க் காரணம் குறித்த வசனங்களும் இளைஞர்களால் பகிரப்பட்டு வருகிறது.

1960களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பேசில் ஜோசப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Parasakthi Censor

"தீ பரவட்டும்" என்று அண்ணாவின் வார்த்தைகளை சிவகார்த்திகேயன், அதர்வா பேசியது மொழிப்போர் தொடர்பான விவாதங்களை தொடங்கி வைத்தது. அதிலும் ஒரு காட்சியில் முன்னாள் முதல்வர் அண்ணா வேடத்தில் சேட்டன், "அதை நாங்கள் செய்யவில்லை.. ஆனால் யார் செய்திருந்தாலும் அவன் என் தம்பி" என்ற வசனம் பலராலும் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் தணிக்கை சான்றிதழில் பராசக்திக்கு 25 இடங்களில் வெட்டு விழுந்திருக்கிறது. அதிலும் அண்ணா எழுதிய புத்தகமான தீ பரவட்டும் என்ற வார்த்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற வசனமான "இங்கு யார் ஆண்டாலும் இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறான்" என்ற 22 நொடி வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அண்ணாவின் இந்தி திணிப்புக்கு எதிரான பேச்சுகள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. பலரும் மொழிப்போர் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அண்ணா பேசிய, தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம். சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்திருக்கிறோம்.

இருமொழிக் கொள்கை, தமிழ், ஆங்கிலம் மட்டும்தான் மும்மொழிக்கு இடமில்லை. எங்களை நீக்கி விட்டு நீங்கள் வந்து உட்கார்ந்து நாங்கள் கொண்டு வந்த இந்த முப்பெரும் சாதனைகளை மாற்றலாம் என்று நினைத்தால்.. மக்கள் வெகுண்டெழுவார்களே என்ற அச்சம் உங்களுக்கு வரும்.. அந்த அச்சம் இருக்கிற வரை அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள் என்ற அண்ணாவின் வார்த்தைகள் பகிரப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்தி திணிப்பு பற்றிய அண்ணாவின் விளக்கமும் கவனம் பெற்றுள்ளது. அதில், உலகத்தோடு உரையாட ஆங்கிலம் இருக்கிறது. அப்படியானால் இந்தியாவுக்குள் மட்டும் உரையாட தமிழர்கள் இந்தியை ஏன் கற்க வேண்டும்? பெரிய நாய் செல்ல பெரிய கதவும், சிறிய நாய் செல்ல சிறிய கதவும் தேவையா? நான் சொல்கிறேன்.. பெரிய கதவின் வழியெ சிறிய நாயும் செல்லட்டும் என்று பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+