Parasakthi: பராசக்தி கண்காட்சி மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 28 ஆம் தேதி வரை நடக்கிறது
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி கண்காட்சி மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 19 ஆம் தேதி கண்காட்சி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு வரும் 28 ஆம் தேதி வரை நடக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பராசக்தி. இந்த திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி முதலில் ரிலீஸ் திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி முன்கூட்டியே மாற்றப்பட்டது.

ஜனநாயகன் பராசக்தி மோதல்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் வரும் ஜன 9 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு மறுநாளே பராசக்தி வெளியாக உள்ளது. விஜய் அரசியலில் குதித்துள்ள நிலையில், தனது கடைசி படம் ஜனநாயகன் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
இதனால், ஜனநாயகன் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளதாகவும் இதில் ஒரு கேரக்டர் போலீஸ் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் விஜய்க்கு இது கடைசி படம் என்பதால் அவரை இதற்கு பிறகு திரையில் காண முடியாது என்பதால் எல்லாத்துக்கும் சேர்த்து கொண்டாடி தீர்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வள்ளுவர் கோட்டத்தில் கண்காட்சி
இத்தகைய சூழலில்தான் ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி கோதாவில் இறங்க உள்ளது. படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் WorldOfParasakthi என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது.
மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு
டிச.19ல் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்தது. டிசம்பர் 25 ஆம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி,வரும் 28 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சில காட்சிகளை கட் செய்யுமாறு
1960-களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு பராசக்தி படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மொழி தொடர்பான பிரச்சனைகள் கதையின் முக்கிய அம்சமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலிதான், பராசக்தியின் சில காட்சிகளை கட் செய்ய சென்சார் போர்டு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், தணிக்கை குழு கூறியதை போல காட்சிகளை கட் செய்தால் படத்தின் முக்கிய காட்சிகள் அடிபடும் என்பதால், படக்குழு மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது. ஜனநாயகன் படத்துடன் நேரடியாக மோதும் பராசக்தி படத்திற்கு தமிழகத்தில் மட்டும் 640 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
அஜித்தின் மங்காத்தா ரீ ரிலீஸ்
இதேபோல் வரும் ஜனவரி 23 ஆம் தேதி அஜித் குமாரின் மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நீண்ட நாட்கள் விடுமுறை வருவதால் இந்த நேரங்களில் திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்களும் திட்டமிட்டு வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications