2 மாதத்துக்கு முன்பே சென்சாருக்கு செல்வது நல்லது.. நான் யாருக்கும் போட்டியில்லை - சிவகார்த்திகேயன்
சென்னை: ‛‛ ‛பராசக்தி' திரைப்படம் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவும், எதிர்ப்பும் கிடையாது. யாருடனும் போட்டியில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. விஜய் படம் வெளியாகும் நாள் எனக்கு கொண்டாட்டம் தான். விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் எனது வேலையில் கவனம் செலுத்துகிறேன். சிக்கல்களை தவிர்க்க படக்குழுவினர் 2 மாதங்களுக்கு முன்பே சென்சாருக்கு செல்வது நல்லது'' என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார்.
பொங்கல் பண்டிகைக்கு விஜயின் ‛ஜனநாயகன்' மற்றும் சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' திரைப்படம் மோதலுக்கு ரெடியானது. ஆனால், ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு சென்சார் சான்று கிடைக்கவில்லை.

இதனால் அந்த படம் வெளியாகவில்லை. இன்று வெளியாக வேண்டிய ‛ஜனநாயகன்' திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாறாக சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்துக்கும் பெரிய இழுப்பறிக்கு பிறகு தான் இன்று சென்சார் சான்று கிடைத்தது. மொத்தம் 25 இடங்களில் மியூட், திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று கூறியதாவது:
‛‛ஜனநாயகன் சென்சார் பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது. இதனால் அதுபற்றி கருத்து தெரிவிக்க கூடாது. பராசக்தி படம் தணிக்கைக்கு சென்றபோது எதிர்பாராத இடங்களில் கட் கொடுத்தார்கள். தணிக்கையின்போது என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாது. படம் பார்க்குமு் உறுப்பினர்களின் கருத்தை பொறுத்து அது மாறுபடும்.
இந்த சிக்கல்களை தீர்க்க படத்தை 2 மாதங்கள் முன்பாகவே தணிக்கைக்கு அனுப்புவது நல்லது. அதை தயாரிப்பாளர்கள் மற்றுமு் படக்குழு சார்பில் உறுதி செய்யப்பட வேண்டுமு். பராசக்தியில் கட் செய்த காட்சிகளை விட மற்ற காட்சிகளில் சொல்ல வந்த கருத்துகளை சொல்லிவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
மாணவர்கள் போராட்டம் பற்றிய படம் இது. இதில் எந்தவித அருசியல் சார்பும் கிடையாது. எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவும், எதிர்ப்பும் கிடையாது. யாருடனும் போட்டியில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது பொங்கல் படங்கள் எல்லாமே பிரச்சனையுடன் தான் வெளியானது. ஜனநாயகன் படம் வெளியாகும் நாள் எனக்கும் கொண்டாட்டம் தான். விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் எனது வேலையில் கவனம் செலுத்துகிறேன்'' என்றார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் பராசக்தி திரைப்படம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரவி மோகன், அதர்வா நடித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா கதாபாத்திரத்தில் நடிகர் சேத்தன் நடித்துள்ளார். இதனால் தான் இந்த திரைப்படத்தில் 25 இடங்களில் திருத்தம் செய்ய பணிக்கப்பட்டது. மேலும் படத்தில் ‛தீ பரவட்டும்’ என்ற வசனங்களுக்கு பதில் ‛நீதி பரவட்டும்’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications