"CM நாற்காலியில் அமர்ந்த பிறகு நான் போடப் போகும் முதல் கையெழுத்து" - சஸ்பென்ஸ் உடைத்த பார்த்திபன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இன்று மாலை 4.46 மணிக்கு அரசியல் களத்தில் அதிவலையை ஏற்படுத்தும் அறிவிப்பு வரப்போவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், "CM நாற்காலியில் அமர்ந்த பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!" எனப் பதிவிட்டுள்ளார். தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் முறையாக அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நாளில் பார்த்திபன் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Parthiban s 4 46 PM Political Announcement Teaser Goes Viral

பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் 'அறிவு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், பார்த்திபன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு, அவரது ரசிகர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அர்சியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிடுவதாக பார்த்திபன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பதிவில், "நண்பர்களே.. இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்!!" என்று கூறி இருந்தார். பார்த்திபனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் பார்த்திபன் அரசியலுக்கு வருகிறாரோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ, படம் குறித்த ஏதாவது அறிவிப்பை வித்தியாசமாக வெளியிடக்கூடும் எனப் பதிவிட்டு வந்தனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் முறையாக அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நாளில் பார்த்திபன் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் பார்த்திபன் சஸ்பென்ஸை உடைத்துள்ளார். சற்று முன்பு அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன். என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்த பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!

போடுங்கம்மா ஓட்டு.. 'Boat' சின்னத்தைப் பாத்து!
இப்படிக்கு, C.M. சிங்காரவேலன் எனும் நான்... 'சோத்துக் கட்சி' " எனத் தெரிவித்துள்ளார். அதாவது, தனது புதிய படத்தின் டைட்டிலை இவ்வாறு வித்தியாசமாக புரொமோட் செய்துள்ளார் பார்த்திபன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+