"வொர்த்தே இல்லையா?”.. விஜய் சொன்ன நேரம் பார்த்து டைமிங்கில் பார்த்திபன் போட்ட ட்வீட்!
சென்னை: "It's WORTH! Worth & worth!Because women is another EARTH" என டைமிங்கில் ட்வீட் செய்துள்ளார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். தவெக தலைவர் விஜய், நேற்று தனது விவாகரத்து விவகாரம் தொடர்பான சலசலப்புகள் பற்றி பேசும்போது அது வொர்த்தே இல்லை எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு மறைமுக பதில் கொடுக்கும் வகையில் ஆர்.பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார்.
"பூமியை நாம் பூமா தேவி என்றே அழைக்கிறோம்.. சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை. எவனோ even அவன் எமனோ அவனை ஈன்றதும் ஒரு பெண்ணே, சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ!" என
மகளிர் தினத்தன்று நடிகர் பார்த்திபன் எக்ஸ் தளத்தில் டைமிங்காக பதிவு செய்துள்ளார்.

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அந்த உறவால் தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் சங்கீதாவை தவெகவின் தொண்டர்கள் இணையங்களில் ஆபாசமாக விமர்சித்து வந்தனர். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக மகளிர் தின விழாவில் பேசிய விஜய், முதல் முறையாக விவாகரத்து விவகாரம் தொடர்பாக மவுனம் கலைத்தார். விஜய் பேசும்போது, "சமீபத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்கள் போராடி ஹர்ட் ஆக வேண்டாம். நீங்கள் ஹர்ட் ஆவது எனக்கு ஹர்ட் ஆகிறது, அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இதெல்லாம் வொர்த்தே இல்ல.. நீங்க மக்களுக்காக போராடுங்க. நானும் நீங்களும் சேர்ந்து மக்களின் பிரச்சனைகளை பார்ப்போம், அதில் வருத்தம் எல்லாம் கிடையாது" எனப் பேசியுள்ளார்.
It’s WORTH ! Worth & worth!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 7, 2026
Because women is another EARTH .
பூமியை நாம்
பூமா தேவி என்றே அழைக்கிறோம்.
சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை.
எவனோ even அவன் எமனோ அவனை
ஈன்றதும் ஒரு பெண்ணே,
சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ !
Happy WOMEN’S DAY ! pic.twitter.com/N361cQEWbX
இத்தனை ஆண்டுகாலமாக உடன் வாழ்ந்த மனைவியின் குற்றச்சாட்டு பற்றி அது வொர்த்தே இல்லை என விஜய் பேசியது விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான்,, ""It's WORTH! Worth & worth!Because women is another EARTH" என டைமிங்கில் ட்வீட் செய்துள்ளார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.
-
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்!












Click it and Unblock the Notifications